பாப்சி சித்வா
பாப்சி சித்வா ( உருது: بیپسی سدھوا ; பிறப்பு ஆகஸ்ட் 11, 1938) குசராத்து பார்சி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க-பாகிஸ்தான் புதின எழுத்தாளர் ஆவார்.[1] இவர் ஆங்கிலத்தில் படைப்புகளை வெளியிடுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.
இந்தோ-கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தாவுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அவர் பரவலாக அறியப்படுகிறார். சித்வா 1991 ஆம் ஆண்டு ஐஸ் கேண்டி மேன் மற்றும் வாட்டர்: எ நாவல் ஆகிய இரண்டு புதினங்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் இரண்டாவது நாவலான வாட்டர்: எ நாவல் புதினம் 2005 ஆம் ஆண்டில் மேத்தா அவர்கள் இயக்கிய நீர் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டது. சிந்துவாவின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு பாப்சி:சைலன்செஸ் ஆஃப் மை லைஃப் எனும் ஆவணப் படத்தினை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டில் இது வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
பின்னணி
தொகுசித்வா குஜராத்தி பார்சி செராட்டிய நெறி பெற்றோர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவர் கராச்சியில் வசித்து வந்தார். பின்னர் குடும்பத்துடன் லாகூருக்குச் சென்றார்.[1] அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு இரண்டு வயது (இது அவரது வாழ்நாள் முழுவதும் அவரை பாதித்தது).1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பிரிப்பு காலத்தில் இவருக்கு வயது ஒன்பது ஆகும்.[3] 1957 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள கின்னார்ட் மகளிர் கல்லூரியில் தனது பி.ஏ. பட்டத்தினைப் பெற்றார்.
தனது 19 வது வயதில் திருமணம் செய்து மும்பை சென்றார் . பின்பு விவாகரத்து பெற்று லாகூரில் செராட்டிய நெறியரான நோசிர் என்பவரை லகூரில் மறுமணம் செய்தார். இவர் எழுத்தாளரக தனது வாழ்க்கையினைத் துவங்குவதற்கு முன்பாக இவருக்கு மூன்ரு குழந்தைகள் இருந்தனர். அவரது குழந்தைகளில் ஒருவரான மொஹூர் சித்வா,[4] அரிசோனாவில் மாநில பிரதிநிதியின் வேட்பாளர் ஆவார்.
போதனை
தொகுஇவர் ஹூஸ்டன் பல்கலைக்கழகம், ரைஸ் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், மவுண்ட் ஹோலியோக் கல்லூரி மற்றும் பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தில் ஆகிய கல்லூரிகளில் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளார்..
விருதுகள்
தொகு1986 ஆம் ஆன்டில் ராட்க்ளிஃப் / ஹார்வர்டில் பன்டிங் பெல்லோஷிப் பெற்றார். 1991 ஆம் ஆண்டில் இத்தாலியின் பெல்லாஜியோவில் உள்ள ராக்ஃபெல்லர் அறக்கட்டளை மையத்தினைப் பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றார். 1991 ஆம் அண்டில் கலைகளில் மிக உயரிய விருதான சீதாரா-இ-இம்தியாஸ் விருதினைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டில் லிலா வாலஸ்-ரீடர்ஸ் டைஜஸ்ட் ரைட்டர்ஸ் விருதினையும், 2007 ஆம் ஆண்டில் வெளியுறவு ஆசிரியர்களுக்கான ப்ரெமியோ விருதும் பெற்றார். இவர் நீர் எனும் நூலினை எழுதியதற்காக இந்த விருதினைப் பெற்றார்.[5] 2000 ஆம் ஆண்டில் ஜோராஸ்ட்ரியன் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றார்.
படைப்புகள்
தொகு2013 ஆம் ஆண்டில் அவர்களின் காதல் மொழி : ரீடிங்ஸ் லாகூர், 2012 ஆம் ஆண்டில் ஜங்கிள் வாலா சாஹிப் இது உருது மொழியில் இவர் மொழிபெயர்த்தார். 2006 இல் சின் அண்ட் ஸ்ப்ளெண்டர் நகரம் லாகூர் பற்றியது.2006 ஆம் ஆண்டில் வாட்டர்: எ நாவல் 2001 இல் பாப்சி சித்வா ஆம்னிபஸ், 1991 இல் கிராக்கிங் இந்தியா ஆகிய நூலகளை எழுதினார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Sharma, Pranay (June 2, 2014). "Those Nights In Nairobi". Outlook India.
- ↑ "Bapsi Sidhwa".
- ↑ "Bapsi Sidhwa". www.litencyc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
- ↑ Allen, Howard. "Worldly Lessons". Tucson Weekly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-14.
- ↑ "Bapsi Sidhwa wins Italy's Premio Mondello". Milkweed Editions. Archived from the original on September 27, 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-09-03.