பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா (Pamidighantam Sri Narasimha)(பிறப்பு 3 மே 1963) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆவார். அயோத்தி உரிமைப் பிரச்சனை மற்றும் இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய வழக்குகளில் பணியாற்றியதால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார்.[1][2]

பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 ஆகத்து 2021
முன்மொழிந்தவர் என். வி. இரமணா
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
இந்திய கூடுதல் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
மே 2014 – 15 திசம்பர் 2018
நியமித்தவர் பிரணாப் முகர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 3 மே 1963 (1963-05-03) (அகவை 60)

தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் நடைமுறையில் மூத்தோருக்கு வாய்ப்பு எனும் மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 55வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "P.S. Narasimha" (in en). Supreme Court Observer. 31 August 2021. https://www.scobserver.in/judges/pamidighantam-sri-narasimha/. 
  2. "PS Narasimha to become 6th lawyer to be elevated to SC Bench from bar on Collegium recommendation". The Economic Times. 19 August 2021. https://m.economictimes.com/news/india/ps-narasimha-to-become-6th-lawyer-to-be-elevated-sc-bench-from-bar-on-collegium-recommendation/articleshow/85436617.cms. 
  3. "7 Next CJIs" (in en). Supreme Court Observer. 23 November 2021. https://www.scobserver.in/journal/7-next-cji-s/.