பாம்பே பேக்கரி

பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பேக்கரி

பாம்பே பேக்கரி (Bombay Bakery) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்து நகரின் சதர் பகுதியில் அமைந்துள்ளது.[1][2] இந்திய நகரமான பம்பாய் நினைவாக நிறுவனத்திற்கு இப்பெயரிடப்பட்டது.[3][4]

பாம்பே பேக்கரி
Bombay Bakery
வகைஅடுமனை
நிறுவுகை1911; 113 ஆண்டுகளுக்கு முன்னர் (1911)
நிறுவனர்(கள்)பலாச் ராய் கங்காராம் ததானி
தலைமையகம்ஐதராபாத்து, பாக்கித்தான்
சேவை வழங்கும் பகுதிஐதராபாத்து
உற்பத்திகள்சாக்குலேட்டு, காபி, மேக்ரூன், கேக்குகள்
உரிமையாளர்கள்சல்மான் சாயிக்கு

வரலாறு தொகு

பாம்பே பேக்கரி 1911 ஆம் ஆண்டு பலாச் ராய் கங்காராம் ததானி என்பவரால் நிறுவப்பட்டது.[5] சிந்து மாகாணத்தைச் சேர்ந்த தாது நகரத்தில் ஓர் இந்து அமில் இனத்தில் இவர் பிறந்தார்.[6]

1948 ஆம் ஆண்டில் பலாச் ராய் கங்காராம் ததானி இறந்தார். இவரது மகன் கிசிஞ்சந்து ததானி பாம்பே பேக்கரியின் உரிமையாளரானார்.[5] வணிகத்தை நன்றாக இவர் விரிவுபடுத்தினார். பேக்கரிக்குத் தேவையான சுவைக்காகப் பல புதிய சமையல் குறிப்புகளை எழுதினார்.[5] பாம்பே பேக்கரியில் சாக்லேட் அடிப்படையிலான ரொட்டிகள், பிசுகட்கள் மற்றும் கேக்குகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சுத்தமான பொருட்கள் சேர்க்கப்பட்டன.

1960 ஆம் ஆண்டில் கிசிஞ்சந்து ததானி இறந்த பிறகு, இவரது மகன் குமார் ததானி தனது சித்தப்பாவுடன் குடும்ப வியாபாரத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இவர் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் ஐதராபாத்தில் காலமானார்.[6]

ஒன்றேகால் நூற்றாண்டாக பாம்பே பேக்கரியில் பாரம்பரிய முறையிலேயே கேக்கு தயாரிக்கப்பட்டது. அதற்காக எந்த இயந்திரமும் பயன்படுத்தப்பட்டதில்லை. பாதாம் அரைக்க மட்டுமே இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.2014 ஆம் ஆண்டில், ஒரு முன்னாள் பேக்கர் ஒருவரால் பாம்பே பேக்கரியின் இரகசிய செய்முறை பகிரங்கப்படுத்தப்பட்டது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "பாகிஸ்தானின் 100 வருட பாம்பே பேக்கரி: இந்து குடும்பத்தின் வெற்றிகர தொழில் ரகசியம் என்ன?". BBC News தமிழ். 2023-05-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
  2. "Karachi Bakery Vs Bombay Bakery". The Express Tribune. February 24, 2019.
  3. Khan, Mohammad Hussain (June 27, 2015). "Bombay Bakery: 100 years and going strong". DAWN.COM.
  4. "Karachi Bakery In Mumbai Shuts Shop But Bombay Bakery In Pakistan Is Running For Over 100 Years". IndiaTimes. March 4, 2021.
  5. 5.0 5.1 5.2 "Bombay Bakery: A Timeless Shop in a Bungalow". Youlin Magazine.
  6. 6.0 6.1 Khan, Mohammad Hussain. "In Sindh's Hyderabad, the century-old Bombay Bakery produces Pakistan's most famous cakes". Scroll.in.
  7. "Copyright violation: Bombay Bakery's top secret recipe leaked". The Express Tribune. August 6, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பே_பேக்கரி&oldid=3714511" இலிருந்து மீள்விக்கப்பட்டது