பாரதிபாலன்

பாரதிபாலன் (03-04-1965) தமிழ்ப் புதின எழுத்தாளரும் சிறுகதை, கட்டுரை எழுத்தாளருமாவார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பனியாற்றும் பாரதிபாலன் தற்காலத் தமிழ்ப் படைப்புலகில் குறிப்பிடதக்க பங்களிப்பு செய்துள்ளார். 1985 முதல் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயனன், சி,சு செல்லப்பா போன்றவர்களின் படைப்புகளில் உந்தப்பட்டு எழுத வந்த பாரதி பாலன்,மதுரை தியாகராசர் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலே ‘வைகைத்தென்றல்’ என்ற மாணவர் இதழினை நடத்தியவர், அந்த இதழினை அப்போதைய மேலவைத்தலைவர் ம.போ.சிவஞானம் பாராட்டியுள்ளார், செம்மலர், தாமரை (இதழ்), கணையாழி மற்றும் தாய் (இதழ்)களில் எழுதத்தொடங்கி தற்பொழுது அனைத்து இதழ்களிலும் எழுதி வரும் பாரதி பாலன் 2018 இல் தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது பெற்றவராவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பாரதிபாலன் தேனிமாவட்டம் சீலையம்பட்டிக் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். தொடக்கக்கல்வியைச் சீலையம்பட்டியிலும், மேல்நிலைக்கல்வியைச் சின்னமனூரிலும், உயர்கல்வியை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தவர். இவர் முதுகலை தமிழ், முதுகலை இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் கல்வியியல் பட்டயம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். இவரது மனைவி முனைவர். ஆர்.மகேஸ்வரி; பாரதி பாலன் மகன், மகளோடு 1987இல் இருந்து சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய செயற்பாடு

தொகு

மதுரை தியாகராசர்கல்லுரியில் பயிலும் காலத்திலேயே தனது எழுத்துப் பணியைத் தொடங்கிய பாரதிபாலன், 1985 முதல் புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மகாகவி பாரதியாரின் மீது உள்ள பற்றால் தன்னுடைய சு.பாலசுப்ரமணியன் என்ற பெயரை 'பாரதிபாலன்' என்று மாற்றிக் கொண்டார். ஆனந்தவிகடன், கல்கி, இந்தியாடுடே, குமுதம், 'கணையாழி', சுபமங்களா உள்ளிட்ட இதழ்களில் சுமார் 700 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ளார். இவருடைய மொத்தச்சிறுகதைகளையும் தொகுத்து சந்தியாபதிப்பகம் பாரதிபாலன் கதைகள் என்று தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

சிறப்புகள்

தொகு

இவருடைய படைப்புகள், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலைப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து சுமார் 35 மாணாக்கர்கள் இள முனைவர் பட்டமும், 4 மாணாக்கர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

பாரதிபாலன், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவிலும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவையிலும் உறுப்பினராகப் பங்களிப்பு செய்து வருபவர். புதுடில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர் பதவியிலும் உள்ளார்.

படைப்புகள்

தொகு

சிறுகதைத் தொகுதிகள்

தொகு
  1. ஒத்தையடிப் பாதையிலே 1993, 1997
  2. உயிர்ச்சுழி 1998,2007,2019
  3. வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் 2003
  4. அலறி ஓய்ந்த மௌனம் 2007
  5. றெக்கை கட்டி நீந்துபவர்கள் 2012
  6. பாரதிபாலன் கதைகள் 2008
  7. மூங்கில்பூக்கும் தனிமை 2019
  8. நாவல்
  9. செவ்வந்தி 1998, 2007
  10. உடைந்த நிழல் 2005/2019
  11. காற்று வரும் பருவம் 2009

கட்டுரைத் தொகுப்பு

தொகு
  1. இசைநகரம்

தொகுப்பும், பதிப்பும்

தொகு
  1. தாலியில் பூச்சூடியவர்கள் (பா.செயப்பிரகாசம் கதைகள் தொகுப்பும், பதிப்பும் - 2016)
  2. லா.ச.ரா.கதைகள் (தொகுப்பும், பதிப்பும் - 2016)
  3. கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் (நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பும், பதிப்பும் - 2015)

கல்வியியல் மற்றும் ஆய்வு தொடர்பான 40 நூல்கள்

விருதுகள்

தொகு
  1. சிதம்பரம் செட்டியார் நினைவுப் பரிசு -1986
  2. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சிறந்த நாவல் - 1999
  3. இலக்கியச் சிந்தனை - 1991, 1994, 2003
  4. ஜோதிவிநாயகம் நினைவுப்பரிசு, சிறுகதைக்காக - 1999
  5. பாரத ஸ்டேட்பேங் விருது - 2005
  6. தமிழ்நாடு அரசு பரிசு - 2012
  7. அறிவுக் களஞ்சியம் விருது - 2017 (இந்திய அரசின் இளைஞர் நலத்துறை, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம்)
  8. கலாம் விருது - 2017,
  9. தமிழ்நாடு அரசின் மகாகவி பாரதியார் விருது 2018 [1][2]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிபாலன்&oldid=4177076" இலிருந்து மீள்விக்கப்பட்டது