பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம்

தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் (Heritage City Development and Augmentation Yojana, HRIDAY) சனவரி 21, 2015 அன்று வெளியிடப்பட்டது; பாரம்பரிய நகரங்களின் பாரம்பரியப் பண்பைக் கெடாமல் இப்பகுதிகளில் ஊரகத் திட்டமிடல், பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுப்பதே இதன் முதன்மை நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சொத்துக்களான நினைவகங்கள், மலைகள், கோவில்கள் முதலியவற்றுடன் தொடர்புடைய ஊரக கட்டமைப்பை மீளமைப்பதும் மேலும் சில மறைந்துள்ளச் சொத்துக்களை மீட்பதும் அடங்கிய பாரம்பரிய கட்டமைப்பு திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தின் கீழ் புறத்தூய்மை வசதிகள், சாலைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் தானுந்து நிறுத்தங்கள், குடிச் சேவைகள், தகவல் மையங்கள் ஆகியன கட்டமைக்கப்படுகின்றன.

மார்ச்சு 2017 வரையிலான 27 மாத காலகட்டத்தில் 500 கோடி செலவில், இத்திட்டம் 12 நகரங்களில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது: அஜ்மீர், அமராவதி,(ஆந்திரப் பிரதேசம்), அம்ரித்சர், பாதமி, துவாரகை, கயை, காஞ்சிபுரம், மதுரா, உத்தரப் பிரதேசம், புரி, வாரணாசி, வேளாங்கண்ணி மற்றும் வாரங்கல்.[1]

மேற்சான்றுகள் தொகு