அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம்
அமராவதி (Amaravathi) இந்திய மாநிலம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூராகும். இது கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி மண்டலத்தில் உள்ளது.[1][4] இப்பகுதியில் அசோகர் காலத்து அமராவதி பௌத்த தொல்லியல் களம் உள்ளது.
அமராவதி
అమరావతి அம்ராவதி, அமரேசுவரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
மண்டலம் | அமராவதி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.70 km2 (4.52 sq mi) |
ஏற்றம் | 38 m (125 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 13,400 |
• அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்முறை | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பின்கோடு | 522 020 |
தொலைபேசி குறி | +91–254 |
வாகனப் பதிவு | AP–7 |
அமராவதி தற்போது பேரூராட்சியால் நிர்வகிக்கப்படும் சிற்றூராக இருந்தபோதிலும்,[5] வரலாற்றில் முக்கியமான நகரமாக இருந்துள்ளது. பழங்காலத்தில் சாதவாகனர்களின் தலைநகரமாக இருந்துள்ளது.[6] இங்கு பஞ்சராமா தலங்களில் அமரராமாவில் அமைந்துள்ள சிறீ அமரலிங்கேசுவர சுவாமி கோவில் அமைந்துள்ளதால் இந்துக்களுக்கு புனிதத்தலமாக உள்ளது. தவிரவும் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கும் கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடையே கட்டப்பட்ட அமராவதி மகாசைத்ய தாது கோபுரம் புகழ்பெற்ற புத்தத் தலமாக விளங்குகின்றது.[7] இந்திய அரசால் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதி இந்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் (இருதய்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[8]
தெலுங்கானா பிரிந்தபிறகான ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரம், அமராவதி, இவ்விடத்தின் பேராலேயே பெயரிடப்பட்டுள்ளது.[9] ஆந்திர தலைநகர் வலயத்தில் அடங்கியுள்ள பல சிற்றூர்களில் ஒன்றாக அமராவதி உள்ளது. புதிய தலைநகருக்கான அடிக்கல் இடப்பட்ட உத்தண்டராயுனிப்பாளம் சிற்றூர் அமராவதிச் சிற்றூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.
சொல்லியல்
தொகுஅமராவதி என்பது உள்ளூர் மொழியில் இறப்பில்லா நகரம் எனப் பொருள்படும்.[10] இங்குள்ள அமரேசுவரர் சிவன் கோவில் கொண்டும் இது அமரேசுவரம், என அழைக்கப்படுகின்றது.[11] முன்னதாக ஆந்திர நகரி.. என்றும் அறியப்பட்டது.[12][13]
வரலாறு
தொகுஅமராவதி மற்றும் அதனை அடுத்துள்ள தரணிக்கோட்டையின் வரலாறு கி.மு இரண்டாம் நூற்றாண்டில் துவங்குகின்றது. இது கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை ஆண்ட சாதவாகனர்களின் தலைநகரமாக விளங்கியது. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கிருஷ்ணா பள்ளத்தாக்கை ஆந்திர இசுவாகுகளும் பல்லவர்களும் ஆண்டு வந்தனர். இவர்களுக்குப் பின்னால் கீழைச் சாளுக்கியர்களும் தெலுங்குச் சோடர்களும் இப்பகுதியில் ஆட்சி செலுத்தினர். கோடா மன்னர்களின் ஆட்சிக்குப் பின்னர் 11ஆம் நூற்றாண்டில் காக்கத்தியர்களின் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஆந்திரப் பேரரசின் அங்கமாக அமராவதி இருந்தது.கந்த புராணத்தில் இவ்விடம் குறித்தும் இங்குள்ள சிவன்கோவில் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.[14]
தில்லி சுல்தானகம், முசுநூரி நாயக்கர்கள், பாமினி சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசுகளின் அங்கமாக அமராவதி இருந்துள்ளது. 1724ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐதராபாத் நிசாம் ஆட்சியில் உள்ளடங்கியிருந்தது. 1750இல் அமராவதியை பிரான்சுக்கு நிசாம் வழங்கினார்; ஆனால் 1759இல் அவர்களிடமிருந்து இங்கிலாந்து பறித்துக் கொண்டது. 1768இல் மீண்டும் நிசாமிற்கு தரப்பட்ட அமராவதியை 1788இல் இங்கிலாந்திற்கே மீளவும் வழங்கினார். சிறிது காலத்திற்கு ஐதர் அலியும் கைப்பற்றியிருந்தார். பிரித்தானியக் குடியேற்றவாதக் காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தது.
இதனையும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "District Census Handbook - Guntur" (PDF). Census of India. p. 14,252. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Elevation for Amaravati". Veloroutes. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ "Census 2011". The
Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 4 (help) - ↑ "List of Villages in Guntur District" (PDF). VGTM Urban Development Authority. Archived from the original (PDF) on 15 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
- ↑ CFMIS Data Entry Status of Gram Panchayats in Amaravathi Mandal of Guntur District
- ↑ Amaravati Temple
- ↑ The Great Stupa at Amaravati
- ↑ "Introduction". HRIDAY official website.
- ↑ "After 18 centuries, Amaravati set to become a 'capital' again". The Times of India. 22 October 2015. http://timesofindia.indiatimes.com/india/After-18-centuries-Amaravati-set-to-become-a-capital-again/articleshow/49489009.cms.
- ↑ "Andhra Pradesh’s capital city Amaravathi". Deccan Chronicle (Hyderabad). 6 April 2015. http://www.deccanchronicle.com/150405/nation-current-affairs/article/all-you-need-know-about-andhra-pradesh%E2%80%99s-capital-city. பார்த்த நாள்: 18 April 2015.
- ↑ "Other name of Amaravati". Guntur district website. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ "Amaravati Museum". AP Tourism Department. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Excavations - Important - Andhra Pradesh
- ↑ Skanda Purana In: Puranic Encyclopedia, 1975, Vettam Mani, Motilal Banarsidas, New Delhi
நூல் பட்டியல்
தொகு- Ramaswami, N. S. (1971). Indian Monuments. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89684-091-1.