பாராபசார் (Barabazar) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

பாராபசார்
Barabazar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்புருலியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
மக்கள்தொகை
 • மொத்தம்7,572
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
741152
மக்களவை (இந்தியா) தொகுதியார்கிராம்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிபந்வான்
இணையதளம்purulia.gov.in

புவியியல் அமைப்பு

தொகு

23.36° வடக்கு 86.65° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாராபசார் நகரம் பரவியுள்ளது. சோட்டா நாக்பூர் பீடபூமியில் தாழ்ந்த படிநிலையை இந்நகரம் உருவாக்குகிறது. பொது சூழ்நிலையில் பார்ப்பதற்கு இந்நிலப்பகுதியில் சிதறிய மலைகள்.[1] காணப்படுவது போல உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] பாராபசார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,5729 ஆகும் இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 67% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 59 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 41 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.

கலாச்சாரம்

தொகு

பாரா பசார் நகரத்திற்கு அருகே பாக்பிராவில் சமணர்களின் கோவில்கள் பதினாறு எஞ்சியுள்ளன. இவற்றில் சில கோயில்கள் மற்றும் படங்கள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும் [3]. இந்நகரின் வடமேற்கு முனையில் பரிசுத்த நாசரேத்தின் ஆர்மேனியன் தேவாலயம் அமைந்துள்ளது மற்றும் கொல்கத்தா பகுதியில் அமைந்துள்ள மூன்று ஆர்மேனியன் கிரித்துவ தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

கல்வி

தொகு

பாராபாகும் மேல்நிலைப் பள்ளி, பாராபசார் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாராபசார் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு கல்வி நிலையங்கள் பாராபசார் நகரில் அமைந்துள்ளன. பாராபசார் பிக்ராம் துடு நினைவு கல்லூரி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே இங்கு உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Houlton, Sir John, Bihar, the Heart of India, 1949, p. 170, Orient Longmans Ltd.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Historical background". Purulia District. Archived from the original on 2008-01-03. பார்க்கப்பட்ட நாள் 2008-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராபசார்&oldid=3575560" இலிருந்து மீள்விக்கப்பட்டது