பாரா-அசோக்சியனிசோல்
பாரா-அசோக்சியனிசோல் (para-Azoxyanisole) C14H14N2O3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அரோமாட்டிக் சேர்மமான இது திண்மநிலையில் வெண்மை நிறத் தூளாகக் காணப்படுகிறது. ஆனால் சூடாகும்போது இது ஒரு நீர்மநிலை படிகத்தை உருவாக்குகிறது. முதலில் அறியப்பட்டதும் மிகவும் எளிதில் தயாரிக்கப்பட்டதுமான நீர்ம படிகங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] நீர்மப் படிகக் காட்சிகளின் வளர்ச்சியில் பாரா-அசோக்சியனிசோல் முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தாக்சி-4-[(4-மெத்தாக்சிபீனைல்)-NNO-அசோக்சி]பென்சீன்
| |
வேறு பெயர்கள்
பா-அசோக்சியனிசோல்
| |
இனங்காட்டிகள் | |
1562-94-3 | |
ChemSpider | 14542 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15277 |
| |
UNII | 4G08S4XUIX |
பண்புகள் | |
C14H14N2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 258.28 g·mol−1 |
அடர்த்தி | 1.14 கி/செ.மீ3 |
உருகுநிலை | 114.9 °C (238.8 °F; 388.0 K) |
கொதிநிலை | 417.9 °C (784.2 °F; 691.0 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 206.6 °C (403.9 °F; 479.8 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாரா-அசோக்சியனிசோல் சேர்மத்தின் நீர்மப் படிக வரம்பு 118 ° செல்சியசு முதல் 136 °செல்சியசு வரை உள்ளது. திண்மத்திலிருந்து நீர்மப் படிகக் காட்சி மாற்றம் 118 ° செல்சியசு வெப்பநிலையிலும் , நீர்மப் படிகக் காட்சியிலிருந்து திசையொருமிய பாய்ம நிலைமாற்றம் 136 ° செல்சியசு வெப்பநிலையிலும் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Shao, Y.; Zerda, T. W. (1998). "Phase Transitions of Liquid Crystal PAA in Confined Geometries". Journal of Physical Chemistry B 102 (18): 3387–3394. doi:10.1021/jp9734437.
- ↑ Liquid Gold: The Story of Liquid Crystal Displays and the Creation of an Industry, Joseph A. Castellano, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-238-956-5