பாரா-குளோரோகிரெசால்
கரிம வேதியியல் சேர்மம்
பாரா-குளோரோகிரெசால் (p-Chlorocresol) என்பது C7H7ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பாரா-குளோரோ-மெட்டா-கிரெசால் என்ற பெயராலும், பிரிவென்டால் சி.எம்.கே என்ற வர்த்தகப் பெயராலும் அழைக்கப்படுகிறது [1]. குளோரினேற்றம் செய்யப்பட்ட பீனால் சேர்மவகையான இது கிருமிநாசினியாகவும், காப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் நிறமற்ற ஈருருவ படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் தண்ணிரில் சிறிதளவு கரைகிறது. பீனால் மற்றும் ஆல்ககாலில் கரைக்கப்பட்டு நச்சுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது [2]. தோலில் படும்பொழுது இச்சேர்மம் ஒரு மிதமான ஒவ்வாமையூக்கியாகக் கருதப்படுகிறது [3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-குளோரோ-3-மெத்தில்பீனால்
| |
இனங்காட்டிகள் | |
59-50-7changed | |
ChEMBL | ChEMBL1230222 |
ChemSpider | 21106018 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 1732 |
| |
பண்புகள் | |
C7H7ClO | |
வாய்ப்பாட்டு எடை | 142.58 g·mol−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |