பாரா-தொலுயிக் அமிலம்
பாரா-தொலுயிக் அமிலம் (p -Toluic acid) என்பது (CH3)C6H4(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. ஆர்த்தோ, மெட்டா - தொலுயிக் அமிலங்களின் மாற்றியன் பாரா-தொலுயிக் அமிலமாகும். 4-மெத்தில்பென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்ம்ம் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்திண்மமாக்க் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் மிகக் குறைவாகவும் அசிட்டோனில் நன்றாகவும் கரைகிறது. பாரா-சைமீனை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்துவதால் பாரா-தொலுயிக் அமிலம் உருவாகிறது[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சாயிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
பாரா-தொலுயிக் அமிலம்
பா- தொலுயிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
99-94-5 | |||
ChEBI | CHEBI:36635 | ||
ChEMBL | ChEMBL21708 | ||
ChemSpider | 7190 | ||
EC number | 202-803-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01454 | ||
| |||
பண்புகள் | |||
C8H8O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 136.15 g·mol−1 | ||
தோற்றம் | படிகத் திண்மம் | ||
அடர்த்தி | 1.06g/mL | ||
உருகுநிலை | 180 முதல் 181 °C (356 முதல் 358 °F; 453 முதல் 454 K) | ||
கொதிநிலை | 274 முதல் 275 °C (525 முதல் 527 °F; 547 முதல் 548 K) | ||
சூடான நீரில் சிறிதளவு கரையும் | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-429 கியூ/மோல் | ||
Std enthalpy of combustion ΔcH |
3862 கியூ/மோல் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டெரிப்தாலிக் அமில உருவாக்கம்
தொகுபாரா-சைலினை டெரிப்தாலிக் அமிலமாக மாற்றும் செயல்முறையில் பாரா-தொலுயிக் அமிலம் ஓர் இடைநிலை விளைபொருளாகத் தோன்றுகிறது. சந்தையில் அதிக அளவுக்கு தேவைப்படும் பல்லெத்திலீன் டெரிப்தாலேட்டை பெருமளவில் தயாரிக்க டெரிப்தாலிக் அமிலம் பயன்படுகிறது. பாரா சைலீனை ஆக்சிசனேற்றம் செய்தும், 4-கார்பாக்சிபென்சால்டிகைடை ஐதரசனாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம். தொடர்புடைய மற்றொரு செயல்முறையில் பாரா தொலுயிக் அமிலத்தை மெத்தில் பாரா-தொலுவேட்டாக மாற்றலாம். மேலும் இத்தொலுவேட்டை ஆக்சிசனேற்றம் செய்து டெரிப்தாலேட்டு தயாரிக்கலாம்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ W. F. Tuley, C. S. Marvel (1947). "p-Toluic Acid". Org. Synth. 27: 86. doi:10.15227/orgsyn.027.0086.
- ↑ Tomas, Rogerio A. F.; Bordado, Joao C. M.; Gomes, Joao F. P. (2013). "p-Xylene Oxidation to Terephthalic Acid: A Literature Review Oriented toward Process Optimization and Development". Chemical Reviews 113: 7421-7469. doi:10.1021/cr300298j. https://archive.org/details/sim_chemical-reviews_2013-10_113_10/page/7421.