பார்கிளே நடவடிக்கை

பார்கிளே நடவடிக்கை (Operation Barclay) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). 1943ல் நடைபெற்ற இதில், பிரித்தானிய உளவு அமைப்புகள், நேச நாட்டுப் படைகள் அடுத்து இத்தாலி மீது படையெடுப்பதற்கு பதில் பால்கன் குடா பகுதியின் மீது படையெடுக்கப்போகின்றன என ஜெர்மானியத் தளபதிகளையும் தலைவர்களையும் நம்ப வைத்தன.

வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் முடிவடைந்தபின்னர் நேச நாடுகள் ஐரோப்பா மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இப்படையெடுப்பு [[சிசிலி] மற்றும் இத்தாலியில் நிகழுவதாக இருந்தன. இதனை நாசி ஜெர்மனியின் உத்தியாளர்களிடமிருந்து மறைக்க, படையெடுப்பு பால்கன் பகுதியின் நிகழ்ப்போகிறது என்று ஒரு போலி பிம்பத்தை நேச நாட்டு உளவுத் துறைகள் உருவாக்கின. 12வது பிரித்தானிய ஆர்மி என்ற போலி படைப்பிரிவை உருவாக்கி, அது வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பால்கன் பகுதிகளைத் தாக்குமென்று வதந்திகளைப் பரப்பின. போலியான படைநகர்த்தல்கள், வானொலி செய்திகள், கிரேக்க மொழிபெயர்ப்பாளர்களைப் படையில் சேர்த்துதல், மின்சுமீட் நடவடிக்கை ஆகிய உத்திகளைக் கையாண்டு, படையெடுப்பு பால்கன் பகுதிகளில் நிகழும் என ஜெர்மானியர்களை நம்ப வைத்தனர். இதனால் கிழக்கு நடுநிலக் கடல் பகுதியில் ஜெர்மானிய படைபலம் கூட்டப்பட்டது. சிசிலியிலிருந்து பல படைப்பிரிவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு கிரீசுக்கு அனுப்பப்பட்டன. இத்தாலியக் கடற்படையின் பெரும்பகுதி ஏட்ரியாட்டிக் கடலுக்கு அனுப்பட்டது. இதனால் சிசிலியை நேச நாட்டுப் படைகள் தாக்கிய போது அங்கு குறைவான அச்சுப் படைகளே நிறுத்தப்பட்டிருந்தன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்கிளே_நடவடிக்கை&oldid=1360471" இலிருந்து மீள்விக்கப்பட்டது