மின்சுமீட் நடவடிக்கை

மின்சுமீட் நடவடிக்கை (Operation Mincemeat) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). 1943ல் நடைபெற்ற இதில், பிரித்தானிய உளவு அமைப்புகள், நேச நாட்டுப் படைகள் அடுத்து இத்தாலி மீது படையெடுப்பதற்கு பதில் கிரீசு மற்றும் சர்தீனியா மீது படையெடுக்கப்போகின்றன என ஜெர்மானியத் தளபதிகளையும் தலைவர்களையும் நம்ப வைத்தன. இது பார்கிளே நடவடிக்கை என்ற மேல்நிலை ஏமாற்று நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

இந்த நடவடிக்கையில் போலியான ஒரு பிரித்தானிய ராணுவ அதிகாரியின் உடல் தயார் செய்யப்பட்டது. இயற்கையான காரணங்களால் இறந்த ஒருவரின் உடல், மேஜர் மார்டின் என்ற ராணுவ அதிகாரி போல் வேடமணிவிக்கப்பட்டு, அதன் கையிலிருந்த பெட்டியில் போலி ஆவணங்கள் வைக்கப்பட்டன. அவ்வாவணங்களில் கிரீசு மீது நேச நாட்டுப் படைகள் படையெடுக்கப் போவது குறித்தான செய்திகள் இடம் பெற்றிருந்தன. அந்த அதிகாரி வானூர்தி விபத்தில் இறந்தார் என்பது போல ஜோடிக்கப்பட்டு, அந்த உடல் ஸ்பெயின் நாட்டுக் கடற்கரையில் ஒதுங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்பெயின் இரண்டாம் உலகப் போரில் நடு நிலைமை வகித்தாலும் நாசி ஜெர்மனிக்கு நெருக்கமாக இருந்தது. எனவே மேஜர் மார்ட்டின் உடலிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஜெர்மானியக் கடற்படை உளவுத்துறை [ஆப்வெருக்குத் தந்துதவியது. ஆவணங்களிலிருந்த செய்தி உண்மையென நம்பிய ஜெர்மானியர்கள், சிசிலியிலிருந்த பல படைப்பிரிவுகளை கிரீசுக்கு மாற்றினர். இதனால் சிசிலியை நேச நாட்டுப் படைகள் தாக்கிய போது அங்கு குறைவான ஜெர்மானியப் படைகளே நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கை இரண்டாம் உலகப் போரின் பெரும் வெற்றி கண்ட ஏமாற்று நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சுமீட்_நடவடிக்கை&oldid=3848707" இலிருந்து மீள்விக்கப்பட்டது