பார்க் சீயோ-ஜோன்
பார்க் சீயோ-ஜோன் (ஆங்கில மொழி: Park Seo joon) (பிறப்பு: டிசம்பர் 16, 1988 ) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் டிரீம் ஹை 2 (2012),[1] கில் மீ, ஹீல் மீ (2015), சி வாஸ் பிரிட்டி (2015), இட்டாவோன் கிளாஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.[2][3]
பார்க் சீயோ-ஜோன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 16, 1988 சியோல் தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
மற்ற பெயர்கள் | பார்க் சீயோ-ஜுன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011-இன்று வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபார்க் திசம்பர் 16, 1988 ஆம் ஆண்டில் சியோலில் பிறந்தார். 2008 ஆம் ஆண்டில் அவர் 19 வயதாக இருந்தபோது தனது கட்டாய இராணுவ சேவையில் இணைந்து 2010 இல் விடுவிக்கப்பட்டார்.[4]
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் 2011 ஆம் ஆண்டு பேங் யோங் குக்கின் 'ஐ ரிமம்பர்' என்ற இசை காணொளி மூலம் பொழுதுபோக்குத் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு 'ட்ரீம் ஹை 2' என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானார்.[5][6] அதை தொடர்ந்து 'போட்ஸ் ஒப் கோல்ட்' (2013), 'ஒன் வார்ம் வேர்ல்ட்' (2013) போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[7] 2014 ஆம் ஆண்டு 'அ விட்ச்ஸ் லவ்' என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.[8] 2013 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 'மியூசிக் பேங்க்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.[9][10]
2015 ஆம் ஆண்டு இவர் நடித்த கில் மீ, ஹீல் மீ மற்றும் சி வாஸ் பிரிட்டி போன்ற நாடகங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.[11][12][13][14] அதே ஆண்டில் 'தி குரோனிக்கல்ஸ் ஆஃப் ஈவில்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[15] 2016 ஆம் ஆண்டு 'ஹ்வாரங்' என்ற வரலாற்றுத் தொடரிலும்,[16][17] 2017 ஆம் ஆண்டு 'பைட் போர் மை வெ' என்ற காதல் நாடகத்திலும் நடித்தார்.[18] இந்த தொடர்கள் கொரியத் தொலைக்காட்சி நாடகங்களில் பெரும் வெற்றியைப் பெற்றது மற்றும் அதன் நேர மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடித்தது.[19]
2018 ஆம் ஆண்டு 'வட்ஸ் ரோங் வித் செகிரேட்டரி கிம்'[20][21] என்ற தொடரிலும் 2019 ஆம் ஆண்டு அகாதமி விருது வெற்ற பாரசைட்டு என்ற திரைப்படத்தில் கௌரவத்தோற்றத்திலும் நடித்துள்ளார்.[22] 2020 ஆம் ஆண்டு இட்டாவோன் கிளாஸ் என்ற வெற்றி தொடரில் நடித்துள்ளார்.[23][24] இந்த தொடரில் நடித்ததற்காக பார்க் 56வது பேக்சாங் கலை விருதுகளில் சிறந்த நடிகருக்கான - தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு யூன் ஹாங்-டேமற்றும் லீ பியோங்-ஹியோன் ஆகியோரின் இயக்கத்தில் வெளியான 'ட்ரீம்' என்ற விளையாட்டுத் திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்தார்.[25] பின்னர் அதே ஆண்டில் உம் டே-ஹ்வா இயக்கிய பேரழிவு திரில்லர் திரைப்படமான 'கான்க்ரீட் உட்டோபியா' என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் ஹாலிவுட்டில் நடித்த மார்வல் திரைப் பிரபஞ்ச திரைப்படமான தி மார்வெல்ஸில் இளவரசர் 'யான் ஆஃப் அலாத்னா' என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.[26][27] இதுவே இவரின் முதல் ஹாலிவுட் அறிமுகம் ஆகும். அதை தொடர்ந்து கியோங்சியோங் கிரியேச்சர் என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் ஜாங் டே-சாங் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kim, Jessica (13 January 2012). "Official poster for Dream High 2 revealed". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2013-05-11.
- ↑ Kim, Ji-yeon (16 January 2012). "Dream High 2 Park Seo Joon the Next Kim Soo Hyun?". enewsWorld. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
- ↑ Lee, Cory (30 October 2013). "Park Seo-joon Joins Han Hye-jin's New Drama". TenAsia. Archived from the original on 2014-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
- ↑ Mukhopadhyay, Riddhiman (14 June 2017). "Fight My Way: Park Seo Joon reveals the similarity between him and his character". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
- ↑ Kim, Jessica (January 13, 2012). "Official poster for Dream High 2 revealed". 10Asia. பார்க்கப்பட்ட நாள் May 11, 2013.
- ↑ Kim, Ji-yeon (January 16, 2012). "Dream High 2 Park Seo Joon the Next Kim Soo Hyun?". enewsWorld. Archived from the original on February 2, 2014. பார்க்கப்பட்ட நாள் January 30, 2014.
- ↑ Lee, Cory (October 30, 2013). "Park Seo-joon Joins Han Hye-jin's New Drama". TenAsia. Archived from the original on June 7, 2014.
- ↑ "[Herald Interview] Park Seo-joon, from shy teen to lively boy next door". The Korea Herald. July 30, 2017.
- ↑ Hong, Grace Danbi (October 17, 2013). "SISTAR's Bora and Park Seo Joon to MC Music Bank". enewsWorld. Archived from the original on February 2, 2014. பார்க்கப்பட்ட நாள் January 30, 2014.
- ↑ Lee, Cory (October 18, 2013). "SISTAR Bora, Park Seo-joon to Host KBS's Weekly Music Show". TenAsia. Archived from the original on June 7, 2014.
- ↑ "Park Seo Joon's Fans Gift 'Kill Me Heal Me' Set with Snack Truck". enewsWorld. March 4, 2015. Archived from the original on July 29, 2017. பார்க்கப்பட்ட நாள் July 29, 2017.
- ↑ "Park Seo Jun Holds His First Fan Meeting in Japan". enewsWorld. March 15, 2016. Archived from the original on ஜூலை 29, 2017. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 19, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Hwang Jung-eum, Park Seo-joon to star in 'She Was Pretty'". The Korea Times. July 30, 2015.
- ↑ "Park Seo-joon's popularity soars in China". Kpop Herald. October 21, 2015.
- ↑ "New thriller 'Chronicles of Evil' a study of moral boundaries". Kpop Herald. May 13, 2015.
- ↑ "Park Seo-joon, Park Hyung-sik and Go Ara to star in 'Hwarang'". The Korea Times. January 5, 2016.
- ↑ "Beautiful men come of age in new KBS period drama". Yonhap News Agency. December 16, 2016.
- ↑ "'Ssam My Way' to star actors Park and Kim". Korea JoongAng Daily. February 25, 2017.
- ↑ "[INTERVIEW] Actor finds worries increase along with popularity". The Korea Times. August 2, 2017.
- ↑ "Park Seo-jun, Park Min-young cast in drama". Korea JoongAng Daily. May 4, 2018.
- ↑ "Park Seo-joon on why he chose 'What's Wrong with Secretary Kim'". Kpop Herald. May 30, 2018.
- ↑ "[단독] 박서준, 봉준호 '기생충' 특별출연..스크린 대세 잇는다". entertain.naver.com. பார்க்கப்பட்ட நாள் January 17, 2019.
- ↑ Yeon, Hwi-seon (July 18, 2019). "박서준X김다미X유재명, JTBC '이태원 클라쓰' 출연 확정 [공식]". OSEN (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
- ↑ "Park Seo-joon to show perfect sync with original webcomic in 'Itaewon Class'". The Korea Herald. January 3, 2020.
- ↑ Dong, Sun-hwa (October 3, 2019). "'Dream': Park Seo-joon trains homeless footballers in new movie". The Korea Times. Archived from the original on October 4, 2019. பார்க்கப்பட்ட நாள் October 4, 2019.
- ↑ Staff, ABS-CBN News (December 1, 2022). "Park Seo-Joon joins Marvel Cinematic Universe with 'Captain Marvel' sequel". ABS-CBN News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் December 3, 2022.
- ↑ "Park Seo-joon breaks silence on his 'too short' screen time in The Marvels: My part is crucial". Hindustan Times News (in ஆங்கிலம்). November 10, 2023. பார்க்கப்பட்ட நாள் November 11, 2023.