பார்சிலோனா பெருங்கோவில்
பார்சிலோனா பெருங்கோயில் அல்லது புனித எலுலேலியா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de la Santa Cruz y Santa Eulalia) என்பது எசுப்பானியாவின் பார்சிலோனாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] புனித எலுலேலியா உரோமானியக் காலத்திலே இரத்த சாட்சியாக மறித்தவர் என நம்பப்படுகின்றது. இவரது உடல் இப்பெருங்கோவிலின் நிலவறையிலே உள்ளதாக கூறப்படுகின்றது. இது கோதிக் கட்டிடக்கலைக்குப் புகழ் பெற்றது. இவ்வாலயம் பார்சிலோனியா கத்தோலிக்க உயர்-மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இவ்வாலயம் கட்டப்பட்டது.
பார்சிலோனா பெருங்கோவில் Cathedral of the Holy Cross and Saint Eulalia Catedral de la Santa Creu i Santa Eulàlia Catedral de la Santa Cruz y Santa Eulalia | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பார்சிலோனா, காத்தலோனியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°23′02″N 2°10′35″E / 41.38389°N 2.17639°E |
சமயம் | Roman Catholic |
மாகாணம் | பார்சிலோனியத் திருச்சபை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1867 |
நிலை | தேவாலயம் |
செயற்பாட்டு நிலை | Active |
தலைமை | லூயிஸ் மார்டினெஸ் சிஸ்டாக் |
இணையத் தளம் | www.catedralbcn.org |
இவாலயத்தினுள் உள்ள தோட்டத்தில் குளம் 1448 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதில் தற்போது பதின்மூன்று வெள்ளை நிற வாத்துக்கள் விடப்பட்டுள்ளன (எலுலேலியா கொலை செய்யப்படும் போது அவருக்கு வயது பதின்மூன்று).[2]
இவ்வாலய கூரையில் மிருகங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை வீட்டு மற்று புராண ரீதியான மிருகங்களின் சிற்பங்கள் ஆகும்.
படத்தொகுப்பு
தொகு-
தேவாலயத்தின் உருவ வரைபடத் திட்டம்
-
பிரதான வாயில்
-
கன்னி மடக்கதவு
-
சப்பல்கள்
-
கன்னி மடம்
-
கன்னிமடத்தினுள் வாத்துக்கள்
-
தேவாலயத்தில் உள்ள பாடகர்களுக்கான ஆசனங்கள்
-
தேவாலயத் தோட்டம்
-
கோபுர மணி
மேற்கோள்கள்
தொகு- ↑ Though sometimes inaccurately so called, the famous Sagrada Família is not a cathedral
- ↑ http://www.catedralbcn.org/
வெளி இணைப்புக்கள்
தொகு- உத்தியோகப்பூர்வ இணையத்தளம்
- தித்தத்துடன்கூடிய மேலோட்டம் பரணிடப்பட்டது 2010-02-10 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்) (பிரெஞ்சு) (செருமன் மொழி) (எசுப்பானியம்)
- Legends of Saint Eulalia. Martyrdom, Burial in Cathedral Crypt, Why it always rains during Barcelona Festival பரணிடப்பட்டது 2011-02-22 at the வந்தவழி இயந்திரம்