பார்சி (நகரம்)
பார்சி (Barshi), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்சி தாலுகாவின் தலைமையிடமும், நகராட்சியும் கொண்ட நகரம் ஆகும். இவ்வூரில் போர்வைகள் போன்ற துணிகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் அதிகம் கொண்டது. இந்நகரம் சோலாப்பூருக்கு வடக்கே 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பார்சி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பர்சி | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பார்சி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 18°14′3″N 75°41′42″E / 18.23417°N 75.69500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தாலுகா | பார்சி |
அரசு | |
• வகை | நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,18,722 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
• கோடை (பசேநே) | 5:30 |
அஞ்சல் சுட்டு எண் | 413401,413411 |
இடக் குறியீடு | (+91) 2184 |
வாகனப் பதிவு | MH-13 |
இணையதளம் | http://barshimahaulb.maharashtra.gov.in/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 24,713 வீடுகள் மற்றும் 38 வார்டுகள் கொண்ட பார்சி நகராட்சியின் மக்கள் தொகை 1,18,722 ஆகும். அதில் ஆண்கள் 60,801 மற்றும் பெண்கள் 57,921 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13418 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 85.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 18,374 மற்றும் 1,480 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95,565 (80.49%), இசுலாமியர் 19,234 (16.2%), கிறித்துவர் 420 (0.35%), பௌத்தர்கள் 898 (0.76%), சமணர்கள் 2,393 (2.02%) மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]