பார்டர்
பார்டர் (Borrder) என்பது 2021 ஆண்டைய தமிழ் மொழி உளவுப்புனைவு படமாகும். இது அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் விஜய ராகவேந்திராவின் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டெஃபி படேல் ஆகியோர் நடித்த இப்படம் தேசபக்தியைச் சுற்றி வருகிறது.[1] இராணுவப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மேஜர் குல்தீப் சிங் சந்த்புரி லோங்கேவாலா சண்டையில் காடிய வீரதீரச் செயல்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இது சென்னை, தில்லி, ஆக்ரா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[2] 2021 நவம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.
பார்டர் | |
---|---|
இயக்கம் | அறிவழகன் வெங்கடாசலம் |
தயாரிப்பு | விஜய ராகவேந்திரா |
கதை | அறிவழகன் வெங்கடாசலம் |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பி. ராஜசேகர் |
படத்தொகுப்பு | வி. ஜே. சாபு ஜோசப் |
கலையகம் | ஆல் இன் பிக்சர்ஸ் |
விநியோகம் | 11:11 புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 19 நவம்பர் 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- அரவிந்த் சந்திரசேகராக அருண் விஜய் [3]
- அபர்ணாவாக ரெஜினா கசாண்ட்ரா
- அரவிந்தின் மனைவியாக ஸ்டெஃபி படேல்
- பகவதி பெருமாள்
தயாரிப்பு
தொகுஇப்படத்தில் அருண் விஜய், அறிமுக நாயகி ஸ்டெஃபி படேல் ஆகியோர் நடித்துள்ளனர். இது முதலில் 'ஜிந்தாபாத்' என்று பெயரிடப்பட்டது. ஆனால் பின்னர் தலைப்பு 'பார்டர்' என மாற்றப்பட்டது.[4] நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் வெங்கடாசலம் ஆகியோர் 2017ஆம் ஆண்டு வெளியான குற்றம் 23 படத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்றுகின்றனர். இறுதிக் கட்ட படபிடிப்பு திசம்பர் 2020இல் தொடங்கியது.[5]
வெளியீடு
தொகுபடம் 19 நவம்பர் 2021 அன்று திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.[6]
இசை
தொகுசாம் சி. எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். திங்க் மியூசிக் மூலம் ஒலிச்சுவடு வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Borrder trailer: Arun Vijay, Regina Cassandra set up an action-thriller". 12 September 2021. https://www.cinemaexpress.com/tamil/videos/2021/sep/12/borrder-trailer-arun-vijay-regina-cassandra-set-up-an-action-thriller-26594.html. பார்த்த நாள்: 12 September 2021.
- ↑ Palisetty (15 April 2021). "Arun Vijay's Borrder first look out, film to release in theatres". https://www.indiatoday.in/movies/regional-cinema/story/arun-vijay-s-borrder-first-look-out-film-to-release-in-theatres-1791203-2021-04-15. பார்த்த நாள்: 12 September 2021.
- ↑ "Arun Vijay-Arivazhagan film titled Borrder, first look out". The New Indian Express. 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 12 September 2021.
- ↑ "Arjun Vijay romances Stefy Patel in Borrder; new photos from the film surface online". Times Now News. 13 May 2021. https://www.timesnownews.com/entertainment-news/tamil/article/arjun-vijay-romances-stefy-patel-in-borrder-new-photos-from-the-film-surface-online/756584.
- ↑ "BREAKING: ARUN VIJAY’S NEXT ACTION FILM WITH DUAL HEROINE HAS A SEMMA UPDATE! DO NOT MISS!". Behind Woods. 30 November 2020. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/arun-vijays-action-film-av31-directed-by-arivazhagan-has-been-titled-as-border.html.
- ↑ "Arun Vijay's Borrder to release on November 19". Times of India. 20 September 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/arun-vijays-borrder-to-release-on-november-19/articleshow/86362484.cms.