அறிவழகன் வெங்கடாசலம்

அறிவழகன்

அறிவழகன் வெங்கடாசலம் (Arivazhagan Venkatachalam) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.

அறிவழகன் வெங்கடாசலம்
Arivazhagan Venkatachalam
சென்னையிலுள்ள கல்லூரியொன்றில் அறிவழகன்.
பிறப்புசூலை 2
கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குனர்
திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ஹீரா அறிவழகன்

இளமைக்காலம்

தொகு

கோயம்புத்தூரில் பிறந்த இவர் திருச்சியில் இளநிலை கணினி பட்டப்படிப்பினை படித்தார். பின்னர் சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குதல் துறையில் பட்டம் பெற்றார். திரைப்படக்கல்லூரியில் இவர் எழுதி இயக்கிய 'புதினம்' என்னும் குறும்படம் அவருக்கு தமிழக அரசு விருதினை பெற்று தந்தது. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற திரைபடங்களில் பணியாற்றினார்.

திரைப்படத்துறை

தொகு

திரைப்படக்கல்லூரியில் இவர் எழுதி இயக்கிய 'புதினம்' என்னும் குறும்படம் அவருக்கு தமிழக அரசு விருதினை பெற்று தந்தது. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக 'பாய்ஸ்' மற்றும் 'அந்நியன்' போன்ற திரைபடங்களில் பணியாற்றினார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஈரம்' திரைப்படத்திற்கு சங்கர் எஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்க பெரும் வெற்றி பெற்றது. இவரின் 'ஈரம்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய திகில் திரைப்படமாக பதிவானது.[1] விஜய் தொலைக்காட்சியின் சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான விருதினை இயக்குனர் அறிவழகன் பெற்றார். ஆஸ்கார் பிலிம் ரவிசந்திரன் தயாரிப்பில் அடுத்த படமான 'வல்லினம்' துணிச்சலான கதையைக்கொண்டு வெளிவந்து அனைத்து தரப்பிலும் வெற்றி பெற்றது.

திரைபடங்கள்

தொகு
வருடம் திரைப்படம்
2009 ஈரம்
2014 வல்லினம்
2016 ஆறாது சினம்
2017 குற்றம் 23[2]

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவழகன்_வெங்கடாசலம்&oldid=3954181" இலிருந்து மீள்விக்கப்பட்டது