பார்த்தசாரதி ஐய்யங்கார்

இந்திய காவல்துறைத் தலைவர்

கே. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார் (K. S. Parthasarathy Iyengar) (1 மே 1903 - 13 ஜூலை 1983) பார்த்தசாரதி ஐய்யங்கார் எனவும் அழைக்கப்படும் இவர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்த ஓர் வழக்கறிஞரும், காவல்துறை அதிகாரியுமாவார். இவர் பாலியல் பற்றி எழுதும் திறனுக்காகவும் அறியப்பட்டார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குலுமணி என்ற கிராமத்தில் மிராசுதார் கே. சி. சீனிவாச ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் படித்தார்.

தொழில் தொகு

இவர், வழக்கறிஞர் சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரின் கீழ் ஒரு பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி 1926இல் பேரரசின் காவல் சேவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் தஞ்சாவூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். அங்கு இவர் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி), துணை காவல் கண்காணிப்பாளர் (டி.ஐ.ஜி), சென்னை காவல்துறை ஆணையர் பதவிவரை உயர்ந்தார்.

திருவிதாங்கூர் மாநிலத்தில் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 1944-1947 வரை அங்கு பணியாற்றினார். திருவிதாங்கூரில் உள்ள தொழிலாளர்களின் புன்னப்பரா-வயலார் போராட்டத்தை அடக்குவதற்கு இவர் திவானுடன் இணைந்து பணியாற்றினார். [2] எவ்வாறாயினும், பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இவர் சென்னை மாகாணத்துக்குத் திரும்ப விரும்பினார், பொதுநலவாய இராச்சியத்தில் பணியாற்ற பிரித்தானிய அதிகாரிகள் அளித்த வாய்ப்பை நிராகரித்தார்.

1958 ஆம் ஆண்டில், இவர் தில்லிக்குச் சென்று இரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டு அமைப்பை உருவாக்கினார். இரயில்வே கண்காணிப்புக் குழு வாரியத்தின் இயக்குநராகவும், ஒன்றிய பொது சேவை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகவும் இருந்தார்.

ஓய்வு தொகு

ஓய்வு பெற்றதும், சமூக சேவைக்காக தன்னை அர்ப்பணிக்க சென்னைக்கு திரும்பினார் . 13 ஜூலை 1983 அன்று தனது 80 வயதில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு