பார்த்தசாரதி சுவாமி சபா
பார்த்தசாரதி சுவாமி சபா (Parthasarathy Swami Sabha) இந்தியாவின் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஒரு கருநாடக இசை சபையாகும். இத்தகைய இசை சபைகளில் இது மிகவும் பழமையான ஒன்றாகும். பார்த்தசாரதி சபை ஆண்டுதோறும் மூன்று விருதுகளை பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது. இசைக் கலைஞர்களுக்கு சங்கீத கலாசாரதி விருது, நடனக் கலைஞர்களுக்கு நாட்டிய கலாசாரதி விருது மற்றும் நாடக கலைஞர்களுக்கு நாடக கலாசாரதி விருது என்பன அம்மூன்று விருதுகளாகும். இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து டிசம்பர் மாத இசை விழாவில் அவர்கள் பங்கேற்று நிகழ்த்தும் ஒவ்வொரு பிரிவிலும் குரல், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் இரண்டு விருதுகள் வழங்கப் படுகின்றன.[1]. மேலும் இச்சபாவில் நித்யசிறீ மகாதேவன் உருவாக்கியுள்ள பாலக்காடு மணி ஐயர் நூற்றாண்டு விருதும், சுதா ரகுநாதன் நிறுவிய எம்.எல். வசந்தகுமாரி விருதுகளும் இச்சபாவால் வழங்கப்படுகின்றன.
சபாவின் வரலாறு
தொகுபார்த்தசாரதி சுவாமி சபை 1900 ஆம் ஆண்டில் மன்னி திருமலைச்சாரியரால் நிறுவப்பட்டது.[2] சபாவுக்கான முதல் நிரந்தர இடமாக ஒரு தகன இடத்தை 1959 ஆம் ஆண்டில் வாங்கியது. பிறகு இந்த இடத்தில் 1962 ஆம் ஆண்டில், சபா ஒரு திறந்தவெளி திரையரங்கைக் கட்டியது[2] In 1962, the sabha constructed an open-air theatre.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Encouraging Talents". Sri Parthasarathy Swami Sabha. Archived from the original on 30 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.