பார்த்தினன்
பார்த்தினன் (Parthenon) என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும்[3][4]. கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகளாக அங்கு நின்று கொண்டிருக்கிறது. ஏதெனியப் பேரரசின் ஆட்சி உச்சகட்டத்தில் இருந்த கி.மு 447 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் கட்டுமாணமப் பணி தொடங்கியது. கி.மு. 438 இல் கோயில் கட்டி முடிக்கப்பட்டாலும் கி.மு.432 வரை கோயிலை அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பொதுவாக இக்கோயில் கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் ஒன்றான டோரிக் ஒழுங்கின் உச்சநிலையாக கருதப்படுகிறது. கோயிலுள்ள அலங்கார சிற்பங்கள் கிரேக்க கலையின் உச்சப்புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும் [5], உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது. பார்த்தினன் மற்றும் அக்ரோபோலிசில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களை கட்டிய ஏதென்சியர்கள் இவற்றை பாரசீக படையெடுப்பாளர்கள் மீது போரிட்டு வெற்றி பெற்ற எலனிக்கியர்களை கொண்டாடுவதற்காகவும், அவ்வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும் கட்டியதாகவே நினைத்தார்கள் [6].
பார்த்தினன் Parthenon | |
---|---|
Παρθενών (கிரேக்கம்) | |
பார்த்தினன் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கிரேக்க கோயில் |
கட்டிடக்கலை பாணி | செந்நெறிக்காலம் |
இடம் | ஏதென்சு, கிரேக்கம் |
தற்போதைய குடியிருப்பாளர் | அருங்காட்சியகம் |
கட்டுமான ஆரம்பம் | கி.மு 447[1][2] |
நிறைவுற்றது | 438 BC[1][2] |
அழிக்கப்பட்டது | பகுதியாக 26 செப்டெம்பர் 1687 |
உரிமையாளர் | கிரேக்க அரசாங்கம் |
உயரம் | 13.72 m (45.0 அடி) |
பரிமாணங்கள் | |
பிற பரிமாணங்கள் | செல்லா: 29.8 கீழ் 19.2 m (98 கீழ் 63 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | 69.5 கீழ் 30.9 m (228 கீழ் 101 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இக்டினாசு, கால்லிகிரேட்டசு |
பிற வடிவமைப்பாளர் | பிடியசு (சிற்பி) |
கோயிலின் சீரழிந்த பகுதிகளை சிரமைப்பதற்குத் தேவையான தேர்ந்தெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களை கிரேக்க கலாச்சார அமைச்சகம் தற்போது நடத்தி வருகிறது [7]. பழைய ஆதெனா ஆலயம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பார்த்தினன ஆலயம் மட்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் அதை முந்தைய பார்த்தினன் அல்லது பழைய பார்த்தினன் என்று அழைத்தார்கள் இது கி.மு. 480 இல் பாரசீக படையெடுப்பின் போது பழைய பார்த்தினன் ஆலயம் அழிக்கப்பட்டது. பார்த்தினன் ஆலயம் வாந்தொல்பொருளியல் அடிப்படையில் ஐயாடெசு விண்மீன்கொத்தை நேரமைத்து கட்டப்பட்டுள்ளது [8]. பெரும்பாலான கிரேக்க கோயில்களைப் போலவே, பார்த்தினன் கோயிலும் நடைமுறையில் ஒரு கருவூலமாகப் பணியாற்றியது [9][10].
ஒரு காலத்தில் இக்கோயில் டெலியன் கூட்டணியின் கருவூலமாக இருந்தது, பின்னர் அது ஏதேன் பேரரசு ஆனது. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டில் பார்த்தினன் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1460களின் தொடக்கத்தில் ஒட்டோமான் வெற்றிக்குப் பிறகு இது ஒரு பள்ளிவாசலாக மாறியது. நீண்ட வரலாறு [11] கொண்ட பார்த்தினான் 1687 ஆம் ஆண்டு. நடைபெற்ற துருக்கியப் போரின் (1683-1699) ஒரு பகுதியாக, வெனிசியர்கள் ஏதென்சைத் தாக்கவும் அக்ரோபோலிசைக் கைப்பற்றவும் மேற்கொண்ட போரில் மிகப்பெரிய பேரழிவினால் சேதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 26 அன்று கோயில் கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தேவையற்ற படைதளவாடங்களை வெனீசியன் ஒருவன் பற்றவைத்த காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டு கோயில் வெடித்துச் சிதறியது. சிலைகள் சேதமடைந்தன.
எல்கின் பளிங்குகள் அல்லது பார்த்தினன் பளிங்குகள் என்று அழைக்கப்பட்ட அச்சிலைகள் 1816 ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அச்சிலைகளைத் திரும்ப ஒப்படைக்கும்படி 1983 ஆம் ஆண்டு முதல் கிரீசு அரசாங்கம் பிரிட்ட்டன் அரசை கேட்டு வருகிறது[12].
பெயர்க்காரணம்
தொகுபார்த்தினன் என்ற பெயரின் தோற்றம் கிரேக்கச் சொல்லான παρθενών (பர்தினோன்) என்பதிலிருந்து வந்தது ஆகும், "திருமணமாகாத பெண்களின் அடுக்கு மாடி குடியிருப்பு" என்பது இதன் பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது, பார்த்தினனைப் பொறுத்தவரை கோவிலின் ஒரு குறிப்பிட்ட அறைக்கு மட்டுமே இப்பொருள் பயன்படுத்தப்பட்டது [13]. கோயிலின் எந்த அறை இவ்வாறு பயன்படுத்தப்பட்டது? அதற்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. லிடெல்-சுகாட்-யோன்சு என்ற கிரேக்க-ஆங்கில அகராதி தொகுப்பாளர் யே.பீ. ப்யூரி கூறியது போலவே இந்த அறை பார்த்தினானின் மேற்கு செல்லாதான் எனக் கூறுகிறார் [6].. பனாதெனாயிக் விழாவில் ஆதெனாவுக்கு உடுத்துவதற்காக ஆடை நெய்யும் நான்கு பெண்கள் இருக்கும் அறையே பாத்தினான் என்று யமௌர்டி டி கிரீன் தெரிவிக்கிறார் [14]. ஆதெனா பார்த்தியோசு ஆதெனா பொலியாசுடன் ஒத்ததாக இருக்கவில்லை, ஆனால் அதனுடன் நெருக்கமாக இணைந்திருக்கின்ற ஆதெனா பார்தியோசு உருக்குலைந்த ஒரு தனித்துவமான வழிபாட்டு ஆதெனாவை கொண்டிருப்பதாக கிறிசுடோபர் பெல்லிங் வலியுறுத்துகிறார் [15]. இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினால் பார்த்தினான் என்ற சொல்லின் பொருள் "கன்னித் தேவியின் ஆலயம்" என்றும் கோவில் தொடர்புடைய ஏதெனா பார்த்தினோசின் வழிபாட்டு முறையையும் குறிக்கிறது [16]. பார்த்தினோசு என்ற புனைபெயர் கன்னிப்பெண், ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண் [17] என்பது பொருளாகும். மேலும் குறிப்பாக ஆர்ட்டெமிசு என்ற வனவிலங்குகளைக் காப்பாற்றுவதாகக் கருதப்படும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். வேட்டை மற்றும் தாவரங்கள், கைவினைகள், தந்திரம், புத்திசாலித்தனம், நடைமுறைகள் முதலானவற்றின் தெய்வமும் பார்த்தினோசு எனப்படுகிறது [18].
கோயிலின் பெயர் மறைமுகமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்னைக் குறிப்பதால் அப்பெண்களின் உன்னதமான தியாகம் நகரத்தின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்பட்டது [19]. பார்த்தினாசு கிறித்துவப் பெண் தெய்வம் கன்னி மரியாவைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளப்படுகிறது. இதனால் பார்த்தினான் கோயில் ஆறாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த . டெமோசுடேனசின் எழுத்துக்களில் பார்த்தினன் என்பது கண்டிப்பாக முழு கட்டிடத்தையும் குறிக்கின்ற ஒரு பெயர் என்று காணப்படுகிறது. 5 ஆம் நூற்றாண்டு கட்டிடக் கணக்குகளில் இந்த அமைப்பு வெறுமனே ஒரு கோயில் என்று மட்டும் சுட்டுவதாக கருதப்ப்படுகிறது. கட்டிடக்கலைஞசர்களின் குறிப்புகளில் ஏதெனியக் கட்டிடக்கலையைச் சிறப்பிக்கும் நூறு அடிக் கட்டிடம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது [20], மேலும் நான்காம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் இந்த கட்டிடம் நூறு அடிக்கட்டிடமாகவும் பார்த்தினனாகவும் இருந்தது என்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் புளுடார்ச்சு இந்த கட்டிடத்தை எகாடோம்பெடோசு பார்த்தினன் எனக் குறிப்பிடுகிறார் [21].
கிரேக்கர்களின் காக்கும் தேவியான ஆதெனாவிற்கு பார்த்தினன் அர்ப்பணிக்கப்பட்டதால் சில நேரங்களில் அது மினெர்வா கோயில் என்று குறிப்பிடப்படுகிறது, இது, குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ஆதெனாவின் ரோமானிய பெயர் மினெர்வா ஆகும் [22].
பணிகள்
தொகுபார்த்தினோன் கட்டடக்கலையின்படி ஒரு கோயில் என்றாலும், பொதுவாக இது அழைக்கப்படுகின்ற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் உண்மையில் இல்லை [23]. பழைய சரணாலயத்தின் தளத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டிடத்திற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆதெனாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதெனாவை நெருங்கி தெய்வத்தின் அருளைப் பெறவியலும் எனக்கருதப்பட்டது [23]. ஆனால் ஏதென்சின் காவல்தெய்வமான ஆதெனா போலியாசின் வழிபாட்டுக்கு ஒருபோதும் பாத்தினன்னை வழங்கவில்லை. ஆதெனோபோலியாசிற்கு அக்ரீபோலிசுக்கு வடக்கில் ஆலயம் உள்ளது.
மீட்டெடுத்தல்
தொகு1975 ஆம் ஆண்டில் கிரேக்க அரசாங்கம் பார்த்தினன் மற்றும் பிற அக்ரோபோலிசு கட்டமைப்புகளை மீட்டெடுக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைத் தொடங்கியது. சிறிய தாமதத்திற்கு பின்னர், அக்ரோபோலிசு நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதறகான குழு ஒன்று 1983 இல் நிறுவப்பட்டது [24]. இந்தத் திட்டம் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றது. தொல்பொருள் குழுவானது தளம் முழுவதும் மீதமுள்ள ஒவ்வொரு கலைப்படைப்பையும் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது, மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் கணினி மாதிரிகளின் உதவியினால் தங்கள் மாதிரி இடங்களை தீர்மானித்தனர். அக்ரோபோலிசு அருங்காட்சியகத்திற்கு சிலைகள் மாற்றப்பட்டன. மீட்டெடுக்கும் பணி மிகவும் கவனத்துடன் தொடங்கப்பட்டது. .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Parthenon. Academic.reed.edu. Retrieved on 2013-09-04.
- ↑ 2.0 2.1 The Parthenon. Ancientgreece.com. Retrieved on 2013-09-04.
- ↑ Barletta, Barbara A. (2005). "The Architecture and Architects of the Classical Parthenon". In Jenifer Neils (ed.). The Parthenon: From Antiquity to the Present. Cambridge University Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-82093-6. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
The Parthenon (Plate 1, Fig. 17) is probably the most celebrated of all Greek temples.
- ↑ Hambidge, Jay; Yale University. Rutherford Trowbridge Memorial Publication Fund (1924). The Parthenon and other Greek temples: their dynamic symmetry. Yale university press.
- ↑ Beard, Mary (2010). The Parthenon. Profile Books. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84765-063-5.
- ↑ 6.0 6.1 Bury, J. B.; Meiggs, Russell (1956). A history of Greece to the death of Alexander the Great, 3rd ed. Oxford: Oxford University Press. pp. 367–369.
- ↑ Ioanna Venieri. "Acropolis of Athens". Hellenic Ministry of Culture. பார்க்கப்பட்ட நாள் 4 May 2007.
- ↑ Boutsikas, Efrosyni; Hannah, Robert (2012). "Aitia, Astronomy and the timing of the Arrhēphoria". The Annual of the British School at Athens 107: 233–245. doi:10.1017/S0068245411000141. பன்னாட்டுத் தர தொடர் எண்:0068-2454.
- ↑ Robertson, Miriam (1981). A Shorter History of Greek Art. Cambridge, England: Cambridge University Press. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-28084-6. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
- ↑ Davison, Claire Cullen; Lundgreen, Birte (2009). Pheidias:The Sculptures and Ancient Sources. Vol. 105. London, England: Institute of Classical Studies, University of London. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905670215. பார்க்கப்பட்ட நாள் 10 September 2017.
- ↑ "The Parthenon". Acropolis Restoration Service. Archived from the original on 28 August 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
- ↑ "Greece urges Britain to return sculptures". UPI.com. 22 June 2009. பார்க்கப்பட்ட நாள் 29 June 2009.
- ↑ παρθενών, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
- ↑ Hurwit 200, pp. 161–163.
- ↑ Research has revealed a shrine with altar pre-dating the Older Parthenon, respected by, incorporated and rebuilt in the north pteron of the Parthenon (Pelling, Greek Tragedy and the Historian, 169).
- ↑ "Parthenon". Encyclopædia Britannica.
- ↑ παρθένος, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
- ↑ Frazer, The Golden Bough, 18
- ↑ Whitley, The Archaeology of Ancient Greece, 352
- ↑ Harpocration.[full citation needed]
- ↑ Plutarch, Pericles 13.4.
- ↑ Encyclopædia Britannica, 1878
- ↑ 23.0 23.1 S. Deacy, Athena, Routledge, 2008, p.111.
- ↑ Lina Lambrinou, "State of the Art: ‘Parthenon of Athens: A Challenge Throughout History" பரணிடப்பட்டது 2008-10-03 at the வந்தவழி இயந்திரம் (pdf file) with bibliography of interim conservation reports;
புற இணைப்புகள்
தொகு- The Acropolis of Athens: The Parthenon (official site with a schedule of its opening hours, tickets and contact information)
- (Hellenic Ministry of Culture) The Acropolis Restoration Project பரணிடப்பட்டது 2013-11-24 at the வந்தவழி இயந்திரம்
- (Hellenic Ministry of Culture) The Parthenon Frieze (கிரேக்கம்)
- UNESCO World Heritage Centre – Acropolis, Athens
- Metropolitan Government of Nashville and Davidson County – The Parthenon பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம்
- The Athenian Acropolis by Livio C. Stecchini (Takes the heterodox view of the date of the proto-Parthenon, but a useful summary of the scholarship.) (Internet Archive)
- The Friends of the Acropolis
- Illustrated Parthenon Marbles – Dr. Janice Siegel, Department of Classics, Hampden–Sydney College, Virginia
- Parthenon:description, photo album