பார்பரா மெக்லின்டாக்
பார்பரா மெக்லின்டாக், (ஜூன் 16, 1902 - செப்டம்பர் 2, ,1992) மருத்துவத்திற்கான நோபல் பரிசைத் தனித்துப் பெற்ற முதல் பெண்மணி.
பார்பரா மெக்லின்டாக் | |
---|---|
பிறப்பு | எலீனோர் மெக்லின்டாக் |
பிறப்பு
தொகுபார்பரா 1902 ஆம் ஆண்டு , ஜூன் மாதம் 16 ஆம் நாள் கனக்டிகட்டில் உள்ள ஹர்ட்போர்டு நகரில் பிறந்தார். 1908 ஆம் ஆண்டு அவர் குடும்பம் நியூயார்க்கின் புரூக்ளின் நகருக்குக் குடி பெயர்ந்தது.
கல்வி
தொகு1923ல் பார்பரா செல்லியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து பயின்று முதுகலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். 1931ல் தேசிய ஆராய்ச்சிக்கழகத்தின் கல்வி உதவித்தொகை பெற்று இரண்டு ஆண்டுகள் கார்னல் பல்கலைகழகம், மிசோரி பல்கலைகழகம், கலிபோர்னியா தொழில் நுட்ப மையம் ஆகியவற்றில் மரபியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1936ல் மிசோரி பல்கலைகழகத்தின் மரபியல் துறையின் உறுப்பினரானார். ஆனால் பெண் என்ற பாகுபாடு காரணமாக அவருக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளா; 1941ல் அங்கிருந்து விலகினார்.
கண்டுபிடிப்புகள்
தொகுதொடர்ந்து மரபியல் ஆய்வில் ஈடுபட்ட பார்பரா 1951ல் தனது மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். 'குரோமொசோம்களில் உள்ள மரபணுக்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றிக் கொள்கின்றன' என்றும் கண்டுபிடித்துக் கூறினார். இதைக் 'குதிக்கும் மரபணுக்கள்' என்று வர்ணித்தார். அதோடு மரபணுக்கள் தங்களைத் தாங்களே பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளும் என்பதையும் நிருபித்தார். அவரிடம் பாகுபாடு காட்டிய பல்வேறு ஆய்வாளர்களும் அவரைத் தேடி வந்து பாராட்டினர். மரபியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றழைக்கப்பட்டது.
விருதுகள், பதவிகள்
தொகு- 1967 இல் தேசிய அறிவியல் அமைப்பு கிம்பர் விருது பெற்றார்.
- 1970 இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் தேசிய அறிவியல் விருது கொடுத்து கௌரவித்தார்.
- 1981 இல் அவருக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருதான ஆல்பர்ட் லேக்கர்ஸ் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
- மரபியலில் அவர் கண்டுபிடிப்புகளுக்கு 1983ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- அமெரிக்க மரபியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- தேசிய அறிவியல் அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்ட மூன்றாவது பெண்மணி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
மறைவு
தொகு1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் நாள் மறைந்தார்.
வெளிஇணைப்புகள்
தொகு- Cold Spring Harbor Laboratory Archives, Barbara McClintock:A Brief Biographical Sketch
- Enhancer and Gene Trap Transposon Mutagenesis in Arabidopsis, comprehensive article on the use of Ac/Ds and other transposons for plant mutagenesis
- Biography and Bibliographic Resources, from the Office of Scientific and Technical Information, United States Department of Energy