பார்வதி புத்தனாறு
பார்வதி புத்தனாறு (ஆங்கிலம்:Parvathi Puthannaar; மலையாளம் പാർവതി പുത്തനാർ) என்பது கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை வழியாகச் செல்லும் ஒரு கால்வாய் ஆகும். இக்கால்வாய் வெட்டப்பட்ட நேரத்தில் திருவிதாங்கூரின் அரசியாக இருந்த பார்வதி பாய் பெயரால் இது அழைக்கப்பட்டது.[1] மலையாளத்தில் புத்தனாறு என்றால் புதிய ஆறு என்று பொருள். இது முதன்மையாக திருவிதாங்கூர் தலைநகரை கடினம்குளம், வாமனபுரம் ஆறு மற்றும் இறுதியாக கொச்சியினை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தக் கால்வாய் மன்னரின் படகு தரையிறங்கும் இடமான வள்ளக்கடவு அணுகலில், அரசரின் படகு இல்லம் அமைந்துள்ளது.
பார்வதி புத்தனாறு வடக்கில் கதினம்குளம் ஏரியில் தொடங்கி தென்கிழக்கில் திருவனந்தபுரம் கடற்கரைக்கு இணையாகப் பாய்கிறது. இது இறுதியாக பூந்துரா அருகே ஒரு சிறிய வடிநிலத்தில் முடிவடைந்து அரபிக்கடலில் கலக்கிறது. பார்வதி புத்தனாறால் உருவாக்கப்பட்ட வடிநிலம் பூந்துரா பொழி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மனிதரால் உருவாக்கப்பட்ட எந்த ஆற்றையும் விட இந்தக் கால்வாயின் நீர் மிகவும் தெளிவானதாகவும் புதியதாகவும் காணப்படுகிறது. பழங்காலத்தில் திருவிதாங்கூர் மட்டுமே இந்தியாவின் ஒரே சுகாதாரமான, தூய்மையான நகரமாக இருந்தது. இருப்பினும், பார்வதி புத்தனாறு இப்போது மாசுபட்டுள்ளது. மாசுபாடு மற்றும் களைகள் காரணமாகப் பெரும்பாலான பகுதிகள் மக்களால் அணுக முடியாதவையாக உள்ளன.[2]
பார்வதி புத்தனாறு மேற்குக் கடற்கரை கால்வாயின் ஒரு பகுதியாகும். இது நீர்வழி 3 (NW-III) ஐ உருவாக்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது சனவரி 5, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Kerala / Thiruvananthapuram News : Polluted canal hits tourism project". தி இந்து. 2009-02-15. Archived from the original on 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-26.
- ↑ "Kerala government announces Rs 80 crore project for developing Parvathy Puthanar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.