பாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு

பாறை எண்ணெய் ஏற்றுமதிசெய் அரபு நாடுகளின் அமைப்பு (Organization of Arab Petroleum Exporting Countries, சுருக்கமாக ஓயெப்பெக் , OAPEC) குவைத்தைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு அரசுகள் பங்கேற்கும் அமைப்பாகும். இது பாறை எண்ணெய் தயாரிக்கும் அரபு நாடுகளின் சக்தி கொள்கைகளை ஒருங்கிணைப்பதுடன் இத்துறையில் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரலாறு தொகு

 
ஓயெப்பெக் உறுப்பினர்களின் நிகழ்நிலை குறித்த வரைபடம்

சனவரி 9, 1968 அன்று எண்ணெய்வள அரபு நாடுகளிலேயே மிகவும் பழமைவாத நாடுகளான குவைத், லிபியா, சவுதி அரேபியா ஆகியவை லெபனானின் பெய்ரூட் நகரில் நடந்த மாநாடு ஒன்றில் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனையை அரசியலில் இருந்து தனிப்படுத்த பாறை எண்ணெய் பொறியியல் அரபு நாடுகளின் அமைப்பொன்றை நிறுவ உடன்பட்டனர்.

ஆறு நாள் போரை அடுத்து அரைகுறையாக நிகழ்த்தப்பட்ட 1967 எண்ணெய் வணிகத்தடையொட்டி அரசியலில் பொருளாதாரத்தை கலப்பதை தவிர்க்க இந்த அமைப்பை இந்நாடுகள் நிறுவ விரும்பின. இதனால் எண்ணெய் ஏற்றுமதி முதன்மையாக இருந்த நாடுகளுக்கு மட்டுமே உறுப்பினர்களாக ஏற்றுக்கொண்டது; புரட்சிகர நாடுகளான எகிப்து, அல்ஜீரியா போன்றவற்றை விலக்கின. மேலும் மூன்று நிறுவனர் நாடுகளின் அனுமதி பெற்றாலே உறுப்பினர் ஆக இயலும் என்றும் விதிமுறைகள் ஏற்படுத்தினர். துவக்கத்தில் இந்த அமைப்பின் குறிக்கோளாக எண்ணெய் ஏற்றுமதித் தடையை ஓர் பொருளாதார ஆயுதமாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் பரவலான உணர்ச்சிகளால் முடிவுகள் எடுக்கபடுவதைத் தடுப்பதுமாகவே இருந்தது.

ஓயெப்பெக்கின் பழமைவாத இயல்பால் ஈராக் இந்த அமைப்பில் சேர மறுத்து அரபு லீக் அமைப்பின் மூலமாக செயலாற்ற முடிவு செய்தது.[1] அதேநேரம் மூன்று நிறுவன நாடுகளும் ஈராக் உறுப்பினராவதை விரும்பவில்லை.[2] இருப்பினும் 1972இல் உறுப்பினராக விருக்கும் நாட்டின் முதன்மை வருமானம் என்றில்லாமல் எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தால் போதுமானது என திருத்தப்பட்டு அல்ஜீரியா, ஈராக், சிரியா மற்றும் எகிப்து சேர்த்துக் கொள்ளப் பட்டன. இதன்பிறகு துவக்க குறிக்கோளிற்கு எதிராக மிகவும் துடிப்பான அமைப்பாக மாறியது.

1973ஆம் ஆண்டு இந்த அமைப்பிற்கு ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆண்டு அக்டோபரில் எகிப்தும் சிரியாவும் இசுரேல் நாட்டுடன் (யோம் கிப்பர் போர் என பின்னர் அழைக்கப்பட்டது) போர் தொடுத்தன. இந்தப் போர் தொடங்கிய பத்தாம் நாள், அக்டோபர் 16, குவைத் ஓயெப்பெக் மாநாட்டையும் பாரசீக வளைகுடாவில் இருந்த ஈரான் உள்ளிட்ட, ஓப்பெக் நாடுகளின் மாநாட்டையும் தனித்தனியே கூட்டியது. ஓயெப்பெக் OAPEC resolved to cut oil production 5% monthly "இசுரேல் சூன் 1967 போரில் ஆக்கிரமித்த அனைத்து அராபியப் பகுதிகளிலிருந்தும் தனது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ளாதவரை....." மாதம் 5% எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக தீர்மானம் இயற்றியது. ஐந்து மாதங்கள் நீடித்த இந்த வணிகத்தடைக்கு மார்ச்சு 1974ஆம் ஆண்டில் நடந்த வாசிங்டனில் நடந்த உச்சி மாநாட்டில் தீர்வு காணப்பட்டது. இந்த வணிகத்தடையின் பின்விளைவுகள் அந்தப் பத்தாண்டின் முழுப்பகுதியிலும் பிரதிபலித்தது. எண்ணெய் உற்பதி செய்யும் நாடுகளுக்கு வணிகத்தடைகள் மூலம் அரசியல் இலாபம் காணலாம் என்பதை முதன்முதலாக உணர்த்தியது. இந்த உணர்வினால் பல உறுப்பினர் நாடுகள் தங்கள் நாட்டு எண்ணெய் வளங்களை கண்டறிந்து இயங்கிய வணிக நிறுவனங்களுடன் ஏற்கெனவே மேற்கொண்ட உடன்பாடுகளை தங்களுக்கு சாதகமாக மீளாய்வு செய்தன. ஆனால் இந்த கூடுதல் வருமானமே பழக்கமாகி பின்னர் ஓயெப்பெக்கினால் ஒற்றுமையாக வணிகத்தடையை செயலாக்க முடியவில்லை.

கேம்ப் டேவிட் உடன்பாடுகளில் ஒப்பிட்டதற்காக 1979இல் எகிப்து வெளியேற்றப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

உறுப்பினர்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "FOREIGN RELATIONS OF THE UNITED STATES 1964-1968, Volume XXXIV Energy, Diplomacy, and Global Issues, Document 260". US State Dept. Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-10.
  2. J.B. Kelly (1980). Arabia, the Gulf and the West. Basic Books. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-00416-4.

வெளி இணைப்புகள் தொகு

உசாத்துணைகள் தொகு