பாலச்சந்திரன் பிரபாகரன் கொலை

2009 இல் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பபட்ட ஒரு தமிழ்ச் சிறுவன்
(பாலச்சந்திரன் பிரபாகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாலச்சந்திரன் பிரபாகரன் (Balachandran Prabhakaran, 1 அக்டோபர் 1996[1] – 18 மே 2009) இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூன்றாவது மகனாவார்.[2]

பாலச்சந்திரன் பிரபாகரன்
பிறப்பு(1996-10-01)அக்டோபர் 1, 1996
இறப்புமே 18, 2009(2009-05-18) (அகவை 12)
நந்திக்கடல், முல்லைத்தீவு, இலங்கை
பணிமாணவன்
பெற்றோர்வேலுப்பிள்ளை பிரபாகரன்
மதிவதனி
உறவினர்கள்சார்ல்ஸ் அன்ரனி (தமையன்)
துவாரகா (தமக்கை)

இவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 2009 மே 18 அன்று கொல்லப்பட்டார். இலங்கை ராணுவம் இவர் போரின் போது குண்டடிபட்டு இறந்ததாக அறிவித்தது. 2013ஆம் ஆண்டில், இவர் இலங்கை ராணுவத்தின் பிணைக்கைதியாய் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இவர் மார்பில் நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை சுடப்பட்ட புகைப்படம் பின்னர் வெளியானது.[3][4]

”நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் கல்லும் மக்ரே, "வெளியான புகைப்படங்கள், இவர் போரின் போது கொல்லப்பட்டார் என்பதைத் தெளிவாக நிராகரிக்கிறது. எவ்வாறெனில் அவர் கையில் உள்ள சிற்றுண்டிப் பொட்டலமும் இயல்பான சூழலும் பிணைக்கைதியாய்க் கொல்லப்பட்டார் என்பதை உணர்த்துகிறது" என்கிறார்.[3]. இலங்கை சனநாயக பத்திரிக்கையாளர் குழுவும், இந்தப் புகைப்படங்கள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை நிரூபிக்கிறது எனக் கூறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "பாலச்சந்திரனின் பிறந்தநாள்".
  2. "Remembering Balachandran, Tamil Guardian". www.tamilguardian.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
  3. 3.0 3.1 Buncombe, Andrew (18 பிப்ரவரி 2013). "Handed a snack, and then executed". London: Independent UK. http://www.independent.co.uk/news/world/asia/handed-a-snack-and-then-executed-the-last-hours-of-the-12yearold-son-of-a-tamil-tiger-8500295.html. பார்த்த நாள்: 10-11-2013. 
  4. "Balachandran Prabhakaran: Sri Lanka army accused over death". BBC UK. 19 பிப்ரவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21509656. பார்த்த நாள்: 10-11-2013.