பாலருவி தொடர்வண்டி
பாலருவி தொடர்வண்டி (palaruvi Express) தினமும் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து, கேரள மாநிலத்தின் பாலக்காடு சந்திப்பு வரை இயக்கப்படும் ஓர் விரைவுத் தொடர்வண்டியாகும். இது இந்திய இரயில்வேயால் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் புனலூர் நகரம் வரை இயக்கப்பட்ட இந்தத் தொடர்வண்டி, சூலை 9 2018 அன்று திருநெல்வேலி சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டது.[2]
பாலருவி தொடர்வண்டி
Palaruvi Express | |||
---|---|---|---|
எர்ணாக்குளம் இரயில் நிலையத்தில் நிற்கும் பாலருவி இரயில் | |||
கண்ணோட்டம் | |||
வகை | விரைவு ரயில் | ||
நிகழ்நிலை | இயங்குகிறது | ||
நிகழ்வு இயலிடம் | கேரளா, தமிழ்நாடு | ||
முதல் சேவை | 20 ஏப்ரல் 2017(ஆரம்ப இயக்கத்தில் பாலக்காடு இரயில் நிலையம் முதல் புனலூர் இரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.)[1] 9 சூலை 2018 (தற்போது திருநெல்வேலி சந்திப்பு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.) | ||
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | திருநெல்வேலி சந்திப்பு (TEN) | ||
இடைநிறுத்தங்கள் | 35 | ||
முடிவு | பாலக்காடு சந்திப்பு (PGT) | ||
ஓடும் தூரம் | 477.6 km (296.8 mi) | ||
சராசரி பயண நேரம் | 14 மணி 50 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினமும் | ||
தொடருந்தின் இலக்கம் | 16791/16792 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | 10 UR, 4 SL, 2 SLR | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
காணும் வசதிகள் | பெரிய சன்னல் | ||
|
பின்னணி
தொகுகிழக்குக் கேரளம் பகுதிக்கும், மத்திய கேரளத்துக்கும் இடையே சிறந்த இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக, ஏப்ரல் 19, 2017 ஆம் ஆண்டு இந்தத் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தினசரி பயணிகள், குறிப்பாக வேணாடு விரைவுவண்டியை நம்பியிருக்கும் அலுவலக ஊழியர்களின் வசதியாக திருநெல்வேலி சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டது.[3][4][5][6].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prabhu flags-off 45 freight terminals, new Kerala passenger train". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
- ↑ Palaruvi Express train extended to Tirunelveli
- ↑ "Punalur-Palakkad Palaruvi Express to chug off on April 19". On Manorama. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
- ↑ "Palaruvi Express to cool down passengers". TNIE. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
- ↑ "New train between Palakkad, Punalur". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
- ↑ "More stops sought for new train from Punalur". Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.