பாலாறு-பொருந்தலாறு அணை

பாலாறு-பொருந்தலாறு அணை தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பழனியிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் ரெங்க மலைக்கும், குட்டிக்கரடுக்கும் இடையே பாலாறு, பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளுக்கும் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியின் உபரி நீர், வில்பட்டி, வடகவுஞ்சி ஆகிய கிராமப் பகுதியில் உருவாகும் இந்த ஆறு பாலாறு அணைப்பகுதியிலும், கொடைக்கானல் வட்டம் மன்னவனூர், கிளாவரை, பூம்பாறை, வில்பட்டி ஆகிய மலைக் கிராமங்களின் பகுதியில் உருவாகும் ஆறு பொருந்தலாறு அணைப்பகுதியிலும் வந்து தேங்குகிறது. இந்த இரு அணைப் பகுதியையும் இணைத்து ஒரே அணையாக பாலாறு-பொருந்தலாறு அணை கட்டப்பட்டுள்ளது. பாலாறு அணையில்மா அனுமர் கோவில் மற்றும் மாமன் பள்ளி தர்ஹா உள்ளது சிறப்பாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாறு-பொருந்தலாறு_அணை&oldid=3249580" இலிருந்து மீள்விக்கப்பட்டது