பாலியல் நிலைகள்

பாலியல் நிலைகள் என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

சுங்கர் காலத்து சிலையுருவம் (முதல் நூற்றாண்டு).

உடலுறவு நிலைகள் தொகு

 
பல்வேறு உடலுறவு வகைகள்

உடலுறவில் பொதுவாக மூன்று நடைமுறைகள் உள்ளன. ஒன்று யோனியில் ஆண்குறியை செலுத்துதல், இரண்டாவது ஆசனவாயில் ஆண்குறியை செலுத்துதல், மூன்றாவது வாய்வழிப் புணர்ச்சி.[1]

இவை தவிர்த்து தனித்த மற்றும் பலரோடு சுய இன்பம் கொள்ளுதல், கைகளாலோ அல்லது பொம்மைகளாலோ யோனியை தேய்த்தல் மற்றும் உட்செலுத்துதல் ஆகியவையும் பாலியல் நடவடிக்கைகளாக உள்ளன.


பாலுறவு கொள்பவர்கள் எண்ணற்ற பாலியல் நிலைகளுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கைகளை வரையறை செய்ய இயலாமல் பல ஆசிரியர்கள் பாலியல் நிலைகள் என்பவை எண்ணற்றவை என கூறுகின்றனர். பாலியல் நிலைகளை வகைப்படுத்த உட்செலுத்தல் முறைகள், உட்செலுத்துதல் அல்லாத முறைகள் என பொதுவாக குறிப்பிடுகின்றனர். இதில் பிரத்தியேகமான உட்செலுத்தல் முறைகள் என்பவை ஆண்குறியையோ, வைபரேட்டர், ஆண்குறி போன்ற பொம்மைகள் போன்றவற்றை பெண்குறிக்குள் செலுத்துதலாகும்.

பிரத்தியேகமான உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் வாய் வழிப் புணர்ச்சி முறைகள் அடங்குகின்றன. உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் சுயஇன்பம் மற்றும் விரல்களால் தேய்த்தல் ஆகிய முறைகள் உள்ளன.

ஆதாரங்கள் தொகு

  1. "Sexual Intercourse". Discovery.com. Archived from the original on 2008-08-22. Retrieved 2008-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_நிலைகள்&oldid=3824634" இலிருந்து மீள்விக்கப்பட்டது