பாலி சாம் நரிமன்

இந்திய அரசியல்வாதி

பாலி சாம் நரிமன் (10 சனவரி 1929 - 21 பிப்ரவரி 2024)[1] உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர். இந்தி உச்ச நீதி மன்றத்தின் முதுபெரும் வழக்குரைஞர்.1950இல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.பல உயரிய பதவிகளை வகித்தார். 1999ஆம் ஆண்டில் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆனார். நீதித்துறையிலும் அரசியல் துறையிலும் அவருடைய கருத்துகள் செவிமடுக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்.

பாலி சாம் நாரிமன்
23 மார்ச் 2007 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமிருந்து பத்ம விபூசண் விருது பெறும் பாலி சாம் நாரிமன்
பிறப்பு10 சனவரி 1929 (1929-01-10) (அகவை 95)
ரங்கூன், பிரித்தானிய பர்மா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிமூத்த வழக்கறிஞர்
பிள்ளைகள்ரோகின்டன் பாலி நரிமன்

1972 மே முதல் 1975 ஜூன் வரை இந்திய கூடுதல் ஜெனரல் என்னும் பதவியில் இருந்தார். 'நெருக்கடி நிலை' இந்திய அரசு பிறப்பித்ததால் அப்பதவியிலிருந்து விலகினார். 1976ஆம் ஆண்டில் அரசியல் சட்ட 42ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்தார். அரசியல் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களிலும், ஊழல் ஒழிப்பு, நதிநீர்ச் சிக்கல் போன்ற விதயங்களிலும் தம் சட்ட ஆலோசனைகளைத் தெரியப்படுத்தினார். பார்சி இனத்தைச் சேர்ந்த நரிமன் 1955இல் பாப்சி காண்ட்ராக்டர் என்னும் பெண்மணியை மணந்தார்.

இவரது மகன் ரோகின்டன் பாலி நரிமன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர் சொத்து குவிப்பு வழக்கில், செயலலிதாவுக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பிணை வாங்க வழக்குரைஞராகப் பணியாற்றியது அறமற்ற செயல் என்ற கருத்து உள்ளது.

விருதுகள்

தொகு

படைப்புகள்

தொகு
  • Before Memory Fades...(2010), தன்வரலாறு
  1. 'Bhishma Pitamah of lawyer community': Eminent jurist Fali S Nariman passes away at 95
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_சாம்_நரிமன்&oldid=3894923" இலிருந்து மீள்விக்கப்பட்டது