பாலேகுளி
தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
பாலேகுளி (Balaguli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
பாலேகுளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
பெயர் வரலாறு
தொகுபருகூருக்கு அடுத்த காரகுப்பம் பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஹரிஹரர் காலத்திய கல்வெட்டு கிடைத்துள்ளது. அந்தக் கல்வெட்டில் அங்கண நாட்டுப் பால சமுத்திரத்தைச் சேர்ந்த மதுகன் என்ற அதிகாரி குறிப்பிடபட்டுள்ளார் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பால சமுத்திரம் என்பது பிற்காலத்தில் பாலேகுளி என்று மருவியுள்ளது என்று தெரியவருகிறது.[2]
அமைவிடம்
தொகுகாவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 120.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kaveripattinam/Balaguli