பாலையவனம் பாளையம்

பாளையக்காரர்

'பாலையவனம் பாளையம்' என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், "அறந்தாங்கி" பகுதி 'பாலையூர்' என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "வணங்கமுடி பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]

பாலையவனம் ஜமீன்தார் அ. துரையரசன் வணங்கமுடி பண்டாரத்தார்

வரலாறு தொகு

1879 ஆம் ஆண்டு, இராமசந்திர விஜய அருணாசல வணங்காமுடிப் பண்டாரத்தார் கீழ் 52 கிராமங்கள் இருந்தன (18954 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 8767 ரூபாய் 12 அணா ஆகும்.[2][3]

சுனையக்காட்டில் கிணற்று (சுனை) ஒன்றினை, விஜய அருணாசல வணங்காமுடி பண்டாரத்தார் பிரதிஷ்டை செய்தார் என்று, கி. பி. 1687 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.[1]

சிற்றம்பல கவிராயர் அவர்கள், ஜமீன் ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது பாடல்கள் பாடி பரிசில்கள் பெற்றுள்ளார்.[1]

இவர்களின் மிகவும் பழமையான அரண்மனை முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[4] இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான் வம்சாவளியில் வந்தவர்கள் ஆவார்கள்[5].

ஜமீன் அ. துரையரசன் வணங்காமுடி பண்டாரத்தார் அவர்கள் பாலைவனம் ஜமீன்களில் இறுதியானவர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலையவனம்_பாளையம்&oldid=3686300" இருந்து மீள்விக்கப்பட்டது