பால்காஷ் ஏரி
பால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும். ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தின் ஒரு பகுதியாகும்.[1]
பால்காஷ் ஏரி | |
---|---|
அமைவிடம் | கசாக்ஸ்தான் |
ஆள்கூறுகள் | 46°32′27″N 74°52′44″E / 46.54083°N 74.87889°E Coordinates: Extra unexpected parameters |
வகை | Endorheic உப்புநீர் |
முதன்மை வரத்து | இலி, கராத்தல், ஆக்சு, லெப்சி, பியான், காப்பல், கோக்சு ஆறுகள் |
முதன்மை வெளியேற்றம் | ஆவியாதல் |
வடிநிலப் பரப்பு | 413,000 கிமீ² |
வடிநில நாடுகள் | கசாக்ஸ்தான் 85% சீனா 15% |
அதிகபட்ச நீளம் | 605 கிமீ |
அதிகபட்ச அகலம் | கிழக்கு 74 கிமீ மேற்கு 19 கிமீ |
மேற்பரப்பளவு | 16,996 கிமீ² |
சராசரி ஆழம் | 5.8 மீ |
அதிகபட்ச ஆழம் | 25.6 மீ |
நீர்க் கனவளவு | 106 மீ³ |
கரை நீளம்1 | 2,385 கிமீ |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 341.4 மீ |
உறைவு | நவம்பர் - மார்ச் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
இவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது.