பால்கோட்டு வனவிலங்கு சரணாலயம்
பால்கோட்டு வனவிலங்கு சரணாலயம் (Palkot Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் கும்லா மற்றும் சிம்டேகா மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகமாகும்.
இது 1990இல் ஏற்படுத்தப்பட்டது. இந்த சரணாலயம் 184 சதுர கி.மீ. பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 872 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சங்க், பாங்கி, பெயின்ஜ்ரா, பலமாரா மற்றும் டோர்பா போன்ற நதிகள் பாயும் இந்த சரணாலயத்தின், அருகில் தப்கரா அணை உள்ளது. வருடாந்திர வெப்பநிலை இங்கு 7 முதல் 40° செண்டிகிரேடு வரை மாறுபடும். சராசரி ஆண்டு மழையளவு 1030 மி.மீ. ஆகும்.[1] இங்கு உலர் இலையுதிர் காடுகள் காணப்படுகிறது. இங்கு யானைகள், சிறுத்தைகள், கரடிகள், குள்ளநரி, குரங்கு, முள்ளம்பன்றி, முயல் முதலியன காணப்படுகின்றன.
இது கும்லாவிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ராஞ்சிக்கு தென்கிழக்கில் 92 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Palkot Wildlife Sanctuary". WildTrails (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-26.
{{cite web}}
: Text "The One-Stop Destination for all your Wildlife Holidays" ignored (help) - ↑ "Palkot Wildlife Sanctuary". india9. 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 September 2019.
- ↑ "Palkot Wildlife Sanctuary". wildtrails. பார்க்கப்பட்ட நாள் 18 September 2019.
- ↑ "Green belt for bear park". telegraphindia. 9 August 2015. பார்க்கப்பட்ட நாள் 18 September 2019.