பால்முகுந்த் கௌதம்
பால்முகுந்த் சிங் கௌதம் (Balmukund Singh Gautam) மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக (மத்தியப் பிரதேச விதான் சபா) தார் தொகுதிக்கான உறுப்பினராகப் பணியாற்றினார்.
பால்முகுந்த் சிங் கௌதம் | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 24 செப்டம்பர் 2013 – 8 திசம்பர் 2013 | |
பின்னவர் | நீனா விக்ரம் வர்மா |
தொகுதி | தார் நகரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லெபாடு கிராமம், தார் மாவட்டம், மத்தியப்பிரதேசம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | லெபாடு, தார் |
வேலை | வணிகர் |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுபால்முகுந்த் சிங் கௌதம் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் தார் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக உள்ளார்.
இவர் 2008 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தார் சட்டமன்றத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நீனா வர்மாவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் தோல்வியடைந்தார். முதல் வாக்கு எண்ணிக்கையில் கௌதம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வர்மாவின் 50,505 வாக்குகளுக்கு எதிராக அவர் 50,507 வாக்குகளைப் பெற்றார். வர்மாவும் இவரது கட்சியினரும் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், இவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். [1] [2]
இவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் மற்றும் 2009-ஆம் ஆண்டில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வர்மாவின் தேர்தல் மற்றும் மறு எண்ணும் செயல்முறையை சவால் செய்தார். தபால் ஓட்டுகளை எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளதாக மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் கெளதமுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காததன் அடிப்படையில் வர்மாவின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. கவுதமுக்கு எதிராக வர்மா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை பெஞ்ச் நிராகரித்தது. இவர் நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 24 செப்டம்பர் 2013 அன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் [1] [3]
நவம்பர் 5, 2013 அன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, 2013 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தார் தொகுதியில் இருந்து கட்சியின் வேட்பாளராக கெளதமை அறிவித்தது. நவம்பர் 25 அன்று தேர்தல் நடைபெற்றது. [4] இவரது வேட்புமனுவை சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். [5] இவர் 11,482 வாக்குகள் வித்தியாசத்தில் நீனா வர்மாவிடம் தோல்வியடைந்தார். [6]
கைது
தொகு3 ஆகத்து 2003 அன்று இராசத்தான் காவல்துறை, பில்வாராவின் சுபாஷ் நகரில் ஒரு டேங்கரை சட்டவிரோத மதுபானம் கொண்டு சென்றதற்காக பறிமுதல் செய்து, கௌதம் மற்றும் அவரது தம்பி ராகேஷ் சிங் உட்பட ஐந்து பேர் மீது ராஜஸ்தான் கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தர் மற்றும் ஜாபுவா காவல்துறையினரின் உதவியுடன் ராஜஸ்தான் காவல்துறையினரால் 11 டிசம்பர் 2012 அன்று பீதாம்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து கெளதம் கைது செய்யப்பட்டார். [7] இவரது சகோதரர் தார், கந்த்வா மற்றும் டெல்லி காவல்துறையின் உதவியுடன் 15 ஏப்ரல் 2012 அன்று டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்டார். [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dhar BJP MLA's Election Void: HC". 20 October 2012 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111045500/http://www.highbeam.com/doc/1P3-2793553781.html. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "State Elections 2008 – Dhar — Madhya Pradesh". பார்க்கப்பட்ட நாள் 5 November 2013.
- ↑ "Madhya Pradesh Pollmeter: Never too late". தி இந்து. 5 November 2013. http://www.thehindu.com/news/national/madhya-pradesh-pollmeter-never-too-late/article5314707.ece?ref=sliderNews. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "कांग्रेस द्वारा विधान सभा चुनाव के लिए 82 प्रत्याशियों की एक और सूची जारी". Prativad.com. 5 November 2013 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105191557/http://www.prativad.com/NewsDetail.aspx?newsid=7614&categoryid=1. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "फालतू की टॉफियां लेना हो तो लो, यहां अब कुछ नहीं हो सकता : दिग्विजय". 28 October 2013 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102011707/http://www.bhaskar.com/article/MAT-MP-IND-c-8-853963-NOR.html. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Constituency Wise Result Status – Madhya Pradesh – Dhar". Eciresults.ap.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். 8 December 2013. Archived from the original on 15 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "कांग्रेस नेता बालमुकुंद गौतम गिरफ्तार" (in Hindi). தைனிக் ஜாக்ரண் (Bhopal). 11 December 2012. http://www.jagran.com/madhya-pradesh/bhopal-9934092.html. பார்த்த நாள்: 5 November 2013.
- ↑ "Power equations evident in mushrooming liquor trade". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். 15 April 2012 இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111045458/http://www.highbeam.com/doc/1P3-2634072011.html. பார்த்த நாள்: 5 November 2013.