பால்வாய் சிரவந்தி ரெட்டி
பால்வாய் சிரவந்தி ரெட்டி (Palvai Sravanthi Reddy)(பிறப்பு 18 ஏப்ரல் 1973) என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முனுகோடு சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர்.[1] சிரவந்தி ரெட்டி, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான பல்வாய் கோவர்தன் ரெட்டியின் மகள் ஆவார். இவர் 1967 முதல் 1999 வரை ஐந்து முறை ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட இவர், காந்தியின் திடீர் மறைவின் போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2]
பால்வாய் சிரவந்தி ரெட்டி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1973 இடுகுடா, நல்கொண்டா மாவட்டம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபால்வாய் சிரவந்தி ரெட்டி, நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சந்தூர் மண்டலம், இடிகுடா கிராமத்தில் பிறந்தார். சட்டம் மற்றும் நிர்வாகத்தில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றவர்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுபால்வாய் சிரவந்தி அகில இந்தியக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும், தெலங்காணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் உள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு தனது தந்தை பல்வாய் கோவர்தன் ரெட்டிக்காக முதன்முறையாகப் பிரச்சாரம் செய்தார். இவரது தீவிர அரசியல் வாழ்க்கை 1999-ல் அவரது தந்தை முனுகோட்டில் போட்டியிட்டபோது அவரது பிரச்சார பொறுப்பாளராகப் பணியாற்றினார்.[4] இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும்,[5] முதல் அகில இந்தியக் காங்கிரசு குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தெலங்காணாவில் 2014 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 27,441 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[6]
காங்கிரசு தலைவர் சோனியா காந்தி முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பால்வாய் சிரவந்தி ரெட்டியின் வேட்புமனுவைச் செப்டம்பர் 9, 2022 அன்று அங்கீகரித்தார்.[7] காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் ஏ. கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி பாஜகவுக்கு மாறியதால் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பாஜக அதிகாரப்பூர்வ வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டியை எதிர்த்துப் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்றார்.[8] இத்தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி கட்சியினைச் சார்ந்த குசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி வெற்றிபெற்றார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who is Munugode Bypolls Congress Candidate Palvai Sravanthi Reddy". 9 September 2022.
- ↑ "'People Expect More from Me and I Will Deliver That': Cong Munugode Bypoll Candidate Palvai Sravanthi". News18.com. 11 September 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ "Palvai Sravanthi Reddy, Congress's candidate for Munugode bypoll".
- ↑ "Palvai Sravanthi is Munugode Congress". The Hindu. 2022-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.
- ↑ TNN / Updated: Sep 10, 2022, 07:40 IST (2022-09-10). "Palvai Sravanthi Congress candidate for Munugode bypoll | Hyderabad News - Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Palvai Sravanthi is Congress candidate for Munugode by-election". 9 September 2022.
- ↑ "Congress Announce Munugode Bypoll Candidate Palvai Sravanthi Reddy | Revanth Reddy | SumanTV". YouTube. 2022-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ "Congress Announce Munugode Bypoll Candidate Palvai Sravanthi Reddy | Revanth Reddy | YOYO TV Channel". YouTube. 2022-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ The Indian Express (6 November 2022). "TRS wins Munugode bypoll, defeats BJP by 10,113 lead" (in en) 18 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. https://indianexpress.com/article/cities/hyderabad/munugode-bypoll-trs-bjp-kusukuntla-prabhakar-reddy-komatireddy-rajagopal-8252348/.