பால் ஆடம்சு
பால் ரிச்சர்ட் ஆடம்சு (Paul Richard Adams) ஒரு நரம்பியல் விஞ்ஞானியார். இலண்டன் இராயல் கழகத்தில் உறுப்பினரான இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள சுடோனி புரூக் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் நடத்தை துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். [1]
பால் ஆடம்சு Paul Adams | |
---|---|
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | Biologist, நரம்பணுவியல் |
பணியிடங்கள் | சுடோனி புரூக் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யுவான் குயிலியம் |
இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றார். மேக்சு பிளாங்க் நிறுவனத்தில் பெர்ட் சக்மனுடன் முனைவர் பட்டமேற்படிப்பை படித்து முடித்தார். [2] பிரித்தானிய மருந்தியல் சங்கம் வழங்கும் நோவார்டிசு நினைவு பரிசை 1979 ஆம் ஆண்டிலும், கத்தம் நினைவு பரிசை 1979 ஆம் ஆண்டிலும் வென்றார். 1986 ஆம் ஆண்டில் மேக்ஆர்தர் அறக்கட்டளையின் பரிசு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு இராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 முதல் 1995 வரை ஓவர்ட் இயூசு மருத்துவ நிறுவனத்தில் புலனாய்வாளராக பணிபுரிந்தார்.
மற்ற நரம்பியல் அறிஞர்களுடன் இணைந்து திறந்த நரம்புவழி அடைப்பு மற்றும் நரம்பியல் பண்பேற்றம் போன்ற நரம்பியல் அறிவியலில் முக்கியத்துவம் மிக்க தற்கால கருத்துகளுக்கு இவர் முன்னோடியாக இருந்தார். தற்போது புதுப்புறணி பற்றிய ஒரு கோட்பாட்டில் பணியாற்றி வருகிறார், இக்கோட்பாடு அதிநவீன கற்றலுக்கான திறவுகோலாக குறிப்பிட்ட நரம்பு செல்களின் இணைப்பு வலிமையை சரிசெய்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்டதாகும்..
செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களின் இணைப்பை சரிசெய்தல்களை சரிபார்ப்பதற்கான நரம்பியல் சாதனத்திற்கான காப்புரிமையை பால் ரிச்சர்ட் ஆடம்சு பெற்றுள்ளார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paul R. Adams Professor". Archived from the original on 19 May 2011. பார்க்கப்பட்ட நாள் 28 October 2010.
- ↑ "Paul Adams, PhD - Professor, Neurobiology and Behavior". Archived from the original on 11 June 2010. பார்க்கப்பட்ட நாள் 28 October 2010.
- ↑ Neuromorphic Device for Proofreading Connection Adjustments in Hardware Artificial Neural Networks