பால பிரஜாபதி அடிகளார்
பால பிரஜாபதி அடிகளார் (Bala Prajapathi Adikalar) அய்யாவழியின் தற்போதைய தலைவராக அறியப்படுகிறார்.[1] இந்து சமயத்தை போன்று அய்யாவழியும் ஒரு ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால் ஆட்சி ரீதியாக அல்லாமல் சமய ரீதியாக மட்டும் அதன் தலைவராக அடிகளார் இருக்கிறார். ஆகையால் அய்யாவழியின் மொத்த கட்டுப்பாடும் அவரின் ஆளுமைக்கு கீழ் வருவதில்லை. இவர் சுவாமிதோப்பு பதியின் தற்போதைய பட்டத்து அய்யாவாகவும் உள்ளார். மேலும் இத்தலைமையை அய்யாவழியின் சில உட்பிரிவுகள் ஏற்றுக்கொள்வதில்லை.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1992-ல் ஏற்பட்ட மண்டைக்காடு மதக்கலவரத்தின் போது அதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர் ஆவார்.[2] அதர்காக தமிழக அரசின் 2003-ஆவது ஆண்டின் மத நல்லிணக்கத்துகான கோட்டை அமீர் விருதை பெற்றார்.