பாளேத்தோட்டம்

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமம்

பாளேத்தோட்டம் அல்லது வாழைத்தோட்டம் (BALETHOTTAM) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பாளேத்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும்.

பாளேத்தோட்டம்
வாழைத்தோட்டம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635206

பெயராய்வு தொகு

கன்னடத்தில் பாளேத்தோட்டம் என்றால் வாழைத்தோட்டம் என்று பொருளாகும். வாழைத் தோட்டங்கள் இங்கு அதிகமாக காணப்பட்டதால் இப்பெயர் வந்தது என்கிறார் கோ. சீனிவாசன்.[2] அரசு ஆவணங்களில் இந்த ஊரானது கன்னடப் பெயரான பாளைத்தோட்டம் என்று குறிப்பிடப்பட்டாலும், இந்த ஊரை மக்கள் அதன் தமிழ்வடிமான வாழைத் தோட்டம் என்றே அழைக்கின்றனர்.

அமைவிடம் தொகு

இந்த ஊரானது பர்கூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 102. 
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Balethottam
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளேத்தோட்டம்&oldid=3656891" இலிருந்து மீள்விக்கப்பட்டது