பாவோன் கோயில், மத்திய சாவகம்

பாவோன் கோயில் (Pawon) (உள்நாட்டில் கேண்டி பாவோன் என்று அழைக்கப்படுகிறது) இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் மகேலாங் என்னுமிடத்தில் உள்ள ஒரு புத்தர் கோயில் ஆகும்.

பாவோன் கோயில்
அமைவிடம்மகேலாங்க், மத்திய ஜாவா
ஆள்கூற்றுகள்7°36′22″S 110°13′10″E / 7.60616°S 110.219522°E / -7.60616; 110.219522
பாவோன் கோயில், மத்திய சாவகம் is located in சாவகம்
பாவோன் கோயில், மத்திய சாவகம்
ஜாவாவில் அமைவிடம்
பாவோன் கோயில், மத்திய சாவகம் is located in இந்தோனேசியா
பாவோன் கோயில், மத்திய சாவகம்
பாவோன் கோயில், மத்திய சாவகம் (இந்தோனேசியா)

அமைவிடம் தொகு

போரோபுதூர் கோயிலுக்கு வடகிழக்கிலும் (1.75 கிமீ, அதாவது 1.09 மைல்) மெண்டுட் கோயிலுக்கு தென் மேற்கிலும் (1.15 கிமீ, அதாவது 0.71 மைல்) இவ்விரு புத்தர் கோயில்களுக்கு இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்விரு கோயில்களும், அவற்றால் இணைக்கப்பட்ட பாவோன் கோயிலும் சைலேந்திர வம்சத்தின் போது (8 – 9 ஆம் நூற்றாண்டுகள்) கட்டப்பட்டவை ஆகும். இந்த கோயில் செதுக்கல் அமைப்பு போன்றவை போரோபுதூரை விட பழமையான கோயில் என்பதை வெளிப்படுத்துகின்றன.

மூன்று கோயில்களும் ஒரு நேர் கோட்டில் அமைந்துள்ளன. அவை இந்தக் கோயில்களை பிணைக்கும் ஒரு குறியீட்டு அடையாளமாக உணர்த்துகின்றன.

 
புத்த கோவில்களின் இருப்பிடம் முக்கோணம்: போரோபுதூர்-பாவோன்-மெண்டுட் ஒரு நேர் கோட்டில்.
 
பாவோன் கோயில், 1900.
 
வெளிப்புற சுவரில் கல்பதரு புடைப்புச்சிற்பம்

"மெண்டுட் மற்றும் போரோபுதூருக்கு இடையில் ஜாவானீஸ் கோயில் கட்டிடக்கலைகளின் நகையான பாவோன் கோயில் உள்ளது. பெரும்பாலும், இந்த கோயில் போரோபுதூரில் ஏறுவதற்கு முன்பு மனதை தூய்மைப்படுத்த உதவுகிறது. "

இந்த புத்தர் கோயிலின் அசல் பெயர் என்னவென்று உறுதியாகக் கூற முடியவில்லை. பாவோன் என்பதற்கு ஜாவானிய மொழியில் "சமையலறை" என்று பொருள்படும், இது அவூ அல்லது தூசி என்ற மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். "தூசி" என்ற வார்த்தையின் தொடர்பு இந்த கோயில் ஒரு ராஜாவிற்கானகு ஒரு கல்லறை அல்லது சவக்கிடங்குக் கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது. [1] இந்த இடம் தகனம் செய்யப்பட்ட சாம்பலைக் கொண்டு அமைந்திருக்கலாம் என்றாலும், அந்த மன்னர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. உள்ளூர் மக்கள் இந்த கோயிலுக்கு கிராமத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு "பஜ்ரானலன்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பஜ்ரனாலன் என்பது வஜ்ரா (இடி அல்லது ஒரு பௌத்த சடங்குக்குரியதாகக் கருதப்படுகிறது) மற்றும் அனலா (தீ, சுடர்) என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது ஆகும்.

வைசாகம் விழா தொகு

சமகாலத்தில் மே அல்லது ஜூன் மாதம் முழு நிலவின்போது இந்தோனேஷியா உள்ள புத்த மதத்தினர் கண்காணிக்க வைசாகம் என்னும் சடங்கினை நிகழ்த்துகின்றனர். இந்த ஆண்டுச் சடங்கின்போது அவர்கள் மெண்டூட் என்னும் இடத்தில் தொடங்கி நடந்து பாவோன் மூலமாகச் சென்று போரோபுதூரை அடைகின்றனர். [2]

கட்டிடக்கலை தொகு

இந்த கோயில் சற்று வடமேற்கு திசையை எதிர்கொண்ட நிலையில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு சதுர அடித்தளத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்தின் மாடிப்படிகள் தொடங்கி, உச்சிப் பகுதியில் அமைந்துள்ள வாயில்கள் வரை காலா-மகர சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, இது பொதுவாக உன்னதமான ஜாவானிய கோயில்களில் காணப்படுகின்ற பாணியாகும். இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் போதிசத்துவர்கள் மற்றும் தாராக்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அங்கு கின்னரர்-கின்னரிகளுக்கு இடையில் கல்பதரு (வாழ்க்கை மரம்) மரமும் உள்ளது. உள்ளே சதுர அறை காலியாக உள்ளது, அதன் மையத்தில் ஒரு சதுர அமைப்பு உள்ளது. செவ்வக சிறிய ஜன்னல்கள் அநேகமாக காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கூரையானது ஐந்து சிறிய ஸ்தூபங்கள் மற்றும் நான்கு சிறிய ரத்னங்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் எளிமை, சமச்சீர்மை மற்றும் நல்லிணக்கம் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் இந்த சிறிய கோயிலை "ஜாவானிய கோயில் கட்டிடக்கலைகளின் நகை" என்று அழைக்கின்றனர். இது பிற்கால சிங்காசரி மற்றும் மஜாபஹித் காலங்களில் காணப்பட்ட உயரமான மெல்லிய கிழக்கு ஜாவானிய பாணியிலிருந்து மாறுபட்ட பாணியில் அமைந்ததாகும்.

குறிப்புகள் தொகு

  1. Soetarno, Drs. R. second edition (2002). "Aneka Candi Kuno di Indonesia" (Ancient Temples in Indonesia), pp. 103. Dahara Prize. Semarang. ISBN 979-501-098-0.
  2. "The Meaning of Procession". Waisak. Walubi (Buddhist Council of Indonesia). Archived from the original on 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2006-12-13.