பிங்குவிய்குலா காடேட்டா
மெக்சிகன் பசைச்செடி | |
---|---|
பிங்குவிய்குலா காடேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | லண்டிபுளோரேசியீ
|
பேரினம்: | பிங்குய்குலா |
இனம் | |
பிங்குவிய்குலா காடேட்டா |
பிங்குவிய்குலா காடேட்டா(Pinguicula caudata) அல்லது பிங்கிகுலா மோரனென்சிசு(Pinguicula moranensis) எனப்படும் இத்தாவரம் லென்டிபுலேரியசி இனத்தைச் சேர்ந்த ஊனுண்ணித் தாவர வகையைச் சார்ந்த்தாகும். எல் சால்வடோர், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட இச்செடியில் உள்ள பூக்களில் வால் போன்ற பகுதி தொங்கிக் கொண்டு இருக்கும். இதனால் இதற்கு இப்பெயர் வந்தது. மேலும் இதை மெக்சிகன் பசைச்செடி[1] என்று அழைப்பார்கள். இந்த இனத்தில் இச்செடி மிகவும் பிரபலமானது ஆகும்.[2]
வளரியல்பு
தொகுஇது மிகவும் ஈரமான சேறு நிறைந்தப் பகுதியில் நன்கு வளர்கிறது. தரையை ஒட்டி, ரோஜாப் பூ இதழ் போல் இதன் இலைகள் அமைந்திருக்கும். இதன் இலைகள் பார்ப்பதற்கு தலைகீழ் முட்டை வடிவத்திலும், வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இலையில் சிக்கிய பூச்சிகளை கொஞ்சம், கொஞ்சமாக செரித்துவிடுகின்றன. இச்செடியின் வளர்ச்சி இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள மிகச் சிறிய செடி, ஓய்வு பெறும் செடியாகும். இது 2 செ.மீ. அளவே உடையது. இதன் இலைகள் தடித்து சதைப்பற்று உடையதாக இருக்கும். இவைகள் மிகச்சிறிய ரோஜாப் பூ போல் இருக்கும். இதன் இலைகள் முழு வளர்ச்சி பெறாமல் இருக்கும். மற்றொரு செடி, வளர்ச்சி பெறும் செடியாகும். இது 6 முதல் 8 செ.மீ. நீளமும், 4 முதல் 6 செ.மீ. அகலமும் கொண்ட இலைகளை உடையது.[3]
வளர்க்கும் முறை
தொகுஇந்தச் சிறிய ஓய்வுபெறும் செடியை பிப்ரவரி மாதத்தில் தொட்டிகளில் நடலாம். செடி நன்கு வளர்ந்த பிறகு இலை முழுவதும் பசை சுரக்கிறது. செடிக்கு தண்ணீர் விடும் போது இலையின் மீது தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இலை மீது பட்டால், இலை மீது உள்ள ஒட்டக்கூடிய பசை அழிந்துவிடும்.
அக்டோபர் மாதத்தில் இச்செடிகளில் வளர்ச்சி குன்றிவிடுகிறது. இதன் பிறகு சிறிய செடியாக 5 மாத காலம் ஓய்வு எடுக்கிறது. இதில் உள்ள மிகச் சிறிய, விறைப்பான இலையை மையத்தண்டிலிருந்து கவனமாக பிரித்து எடுக்க வேண்டும். எடுக்கும் போது அடிபடாமல் நல்ல நிலையில் எடுத்த இலைகளே புதிய செடிகளை உருவாக்கும். இந்த இலையை மணல் தட்டில் வைத்து, இலை முழுவதும் மூடும்படி மணல் பரப்ப வேண்டும். இதை கண்ணாடித் தட்டால் காற்றுப் புகாமல் மூடிவைக்க வேண்டும். இதனால் ஈரப்பசை உள்ளே பாதுகாத்து வைக்கப்படுகிறது. 4 முதல் 6 வாரத்தில் புதிய இளம் நாற்று உருவாகிறது.[4]
பயன்கள்
தொகுஇச்செடிகளை ‘ஆர்க்கீடு’ தாவரங்கள் வளர்க்கும் சிறப்பு வீடுகளில் இவற்றையும் வளர்க்கிறார்கள். ஆர்க்கீடு செடிகளில் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்யும் ஈக்களை ஒழிப்பதற்கு இச்செடிகள் பயன்படுகின்றன. ஆர்க்கீடுகளைத் தாக்கும் ஈக்கள் இச்செடியின் இலைகளில் ஒட்டிக்கொண்டு மடிகின்றன. இதனால் ஆர்க்கீடு தாவரங்கள் அழியாமல் பாதுகாக்கின்றன. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- ↑ Zamudio, S. 1999 Notas sobre la identidad de Pinguicula moranensis H.B.K., con la description de una variedad nueva, Acta Botanica Mexicana, 1999, vol.49, pages 23–34
- ↑ Alcalá, R.E. & Dominguez, C.A. 2005 Differential Selection for Carnivory Traits Along an Environmental Gradient in Pinguicula moranensis; Ecology, 86(10), 2005, pp. 2652–2660
- ↑ D'Amato, P. 1998. The Savage Garden: Cultivating Carnivorous Plants. Berkeley, California: Ten Speed Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89815-915-6
- ↑ International Carnivorous Plant Society, Registered Cultivar Names—Pinguicula பரணிடப்பட்டது 2007-03-18 at the வந்தவழி இயந்திரம். Retrieved on January 2, 2007.