பிசர் கடற்குதிரை

பிசர் கடற்குதிரை
CITES Appendix II (CITES)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. பிசரி
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு பிசரி
ஜோர்தான் & எவர்மேன், 1903

பிசர் கடற்குதிரை (Fisher's seahorse) அல்லது அவாயித் தீவு கடற்குதிரை என்று அழைக்கப்படும் கிப்போகாம்பசு பிசரி என்பது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினமாகும். இது அவாய் தீவுகளில் இருப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும் முந்தைய தவறான அடையாளங்கள் ஆத்திரேலியா மற்றும் நியூ கலிடோனியாவில் இவ்வினங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டின.[2] வாழ்விட விருப்பத்தேர்வுகள் தெரியவில்லை. ஆனால் இது கரையிலிருந்து வெகு தொலைவில் மற்றும் 100 மீட்டருக்கும் (330 அடி) அதிகமான ஆழத்தில் காணப்படுகிறது. உணவுப் பழக்கங்கள் குறித்தும் தகவல் எதுவும் இல்லை. ஆனால் மற்ற கடற்குதிரைகளைப் போலவே சிறிய ஓட்டுமீன்களை உண்ணுகின்றன என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவாயித் தீவுகளில் காணப்படும் கிப்போகாம்பசு பேரினத்தில் காணப்படும் மூன்று பேரினங்களில் கிப்போகாம்பசு பிசரி ஒன்றாகும்.[3] இவை உள்பொரிமுட்டியிடும் இனங்களாகும். ஆண்கள் முட்டையிலிருந்து குட்டிகள் வெளியேறும் முன் அடைகாக்கின்றன.[2] இவை 8 சென்டிமீட்டர் (3,1 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது.[4] இதனுடைய சிற்றினப் பெயரும் பொதுப்பெயரும் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் "வால்டர் வி. பிசர்" நினைவாக இடப்பட்டது.[5] இசுடான்போர்டில் ஜோர்டான் மற்றும் எவர்மானின் சக ஊழியராக இருந்தார் வால்டர் கென்ரிக் பிசர் இருந்தார். இப்பெயரில் "வி" எனும் எழுத்து ஒரு எழுத்துப்பிழையாகக் கருதப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  2. 2.0 2.1 Pollom, R. (2017). "Hippocampus fisheri". The IUCN Red List of Threatened Species 2017: e.T41009A54908481. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T41009A54908481.en. 
  3. Szabó, Zoltán; Kimokeo, Bethany K.; Toonen, Robert J.; Randall, John E. (2011). "On the status of the Hawaiian seahorses Hippocampus hilonis , H. histrix and H. fisheri (Syngnathidae)" (in en). Marine Biology Research 7 (7): 701–709. doi:10.1080/17451000.2011.558096. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-1000. http://www.tandfonline.com/doi/abs/10.1080/17451000.2011.558096. 
  4. Lourie, S.A., A.C.J. Vincent and H.J. Hall, 1999. Seahorses: an identification guide to the world's species and their conservation. Project Seahorse, London. p. 214 Hippocampus fisheri is one out of the three species of Hippocampus genus found in the Hawaiian islands.
  5. D.S. Jordan; B.W. Evermann (1903). "Descriptions of new genera and species of fishes from the Hawaiian Islands". Bulletin of the U. S. Fish Commission 22 (1902): 161–208. https://spo.nmfs.noaa.gov/sites/default/files/pdf-content/fish-bull/fb22.8.pdf. 
  6. Christopher Scharpf & Kenneth J. Lazara (10 January 2021). "Order SYNGNATHIFORMES: Families AULOSTOMIDAE, CENTRISCIDAE, FISTULARIIDAE, SOLENOSTOMIDAE and SYN". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசர்_கடற்குதிரை&oldid=3986593" இலிருந்து மீள்விக்கப்பட்டது