பிசுமத்தைடு

வேதிச் சேர்மம்

பிசுமத்தைடு (Bismuthide) என்பது Bi3− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அயனியாகும்.

பிசுமத்தைடுகள் அதிக நேர்மின்னூட்டம் கொண்ட தனிமங்களைக் கொண்ட பிசுமத்தின் சேர்மங்கள் ஆகும். இவை பகுதியளவு உலோகம் மற்றும் பகுதியளவு அயனிப் பிணைப்புகளைக் கொண்ட இடை உலோக கலவைகளாக உள்ளன.[1] பெரும்பாலான பிசுமத்தைடுகள் திறமையான பொதித்தல் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றன. இதனால் அடர்த்தி நிரம்பிய கட்டமைப்புகளாக மாறுகின்றன. இப்பண்பு உலோகங்களிடை சேர்மங்களின் சிறப்பியல்பு ஆகும்.

ஓல்மியம் பிசுமத்தைடு, டிசிப்ரோசியம் பிசுமத்தைடு, நியோடிமியம் பிசுமத்தைடு, பிரசியோடைமியம் பிசுமத்தைடு ஆகியன பிசுமத்தைடு சேர்மங்களூக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "bismuthide". Your Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்தைடு&oldid=4138353" இலிருந்து மீள்விக்கப்பட்டது