பிசுமத்(III) சல்பைடு
பிசுமத்(III) சல்பைடு (Bismuth(III) sulphide) என்பது Bi2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்தும் கந்தகமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இயற்கையில் பிசுமத்தினைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(III) சல்பைடு
| |
வேறு பெயர்கள்
பிசுமத் சல்பைடு
டைபிசுமத் டிரைசல்பைடு | |
இனங்காட்டிகள் | |
1345-07-9 | |
ChemSpider | 141425 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Bi2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 514.16 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு நிறத்தூள் |
அடர்த்தி | 6.78 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 850 ˚செ[1] |
கரையாது | |
கரைதிறன் | அமிலங்களில் கரையும் |
-123.0·10−6 cm3/mol | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26, S37 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிசுமத்(III) உப்பை ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்கலாம்.
2Bi3+ +3H2S → Bi2S3 + 6H+
வெற்றிடமாக்கப்பட்ட சிலிகா குழாயில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 96 மணி நேரம் தனிம நிலை பிசுமத்தும் தனிமநிலை கந்தகமும் வினை புரிந்தாலும் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்க முடியும்.
2Bi + 3S → Bi2S3
பண்புகள்
தொகுஆண்டிமனி(III) சல்பைடு சேர்மத்துடன் பிசுமத்(III) சல்பைடு சமகட்டமைப்பு வடிவத்தைக் கொண்டுள்ளது. பிசுமத் அணுக்கள் இரண்டு வேறுபட்ட சூழல்களில் உள்ளன. இரண்டிலும் ஏழு ஒருங்கிணைந்த பிசுமத் அணுக்கள், 4 சமதள முக்கோணத்திலும், 3 அணுக்கள் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படுகின்றன. அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது[2].
பிசுமத்(III) சல்பைடு மனித உடலில் இரையக குடல்பாதையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சல்பைடு மனித பெருங்குடலில் இருக்கும் போது தற்காலிகமாக நாக்கில் பிரச்சினைகளும் வாயில் மலச்சிக்கலும் உண்டாகும்.
பயன்கள்
தொகுபல சேர்மங்கள் தயாரிப்பில் தொடக்க பொருளாக உள்ளது[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry, 5th edition Oxford Science Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8