பிசுமத் பாசுபைடு

வேதிச் சேர்மம்

பிசுமத் பாசுபைடு (Bismuth phosphide) என்பது BiP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்தும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

பிசுமத் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்பிசுமத்
இனங்காட்டிகள்
12330-83-5
InChI
  • InChI=1S/Bi.P/q+3;-3
    Key: UKKKTITYQGAFLZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22234758
  • [P-3].[Bi+3]
பண்புகள்
BiP
வாய்ப்பாட்டு எடை 239.9
தோற்றம் கருப்பு நிற திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சோடியம் பாசுபைடும் தொலுயீனிலுள்ள (0 பாகை செல்சியசு) பிசுமத் முக்குளோரைடும் வினையில் ஈடுபட்டு பிசுமத்து பாசுபைடு சேர்மத்தை உருவாக்குகின்றன. :[3]

 

இயற்பியல் பண்புகள்

தொகு

பிசுமத் பாசுபைடு காற்றில் எரியும். கார்பனீராக்சைடு சூழலில் சூடாக்கப்படும் போது படிப்படியாக பாசுபரசு ஆவியாகும் தன்மை காணப்படுகிறது.

வேதியியல் பண்புகள்

தொகு

நீருடன் சேர்த்து பிசுமத் பாசுபைடை கொதிக்க வைத்தால் பிசுமத் பாசுபைடு ஆக்சிசனேற்றம் அடைகிறது. வலிய அமிலங்கள் அனைத்திலும் பிசுமத் பாசுபைடு கரையும்.

பயன்கள்

தொகு

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் பிசுமத் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bismuth Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  2. Carmalt, Claire J.; Cowley, Alan H.; Hector, Andrew L.; Norman, Nicholas C.; Parkin, Ivan P. (1 January 1994). "A synthesis of bismuth(III) phosphide: the first binary phosphide of bismuth". Journal of the Chemical Society, Chemical Communications (in ஆங்கிலம்). pp. 1987–1988. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/C39940001987. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
  3. Allen, Geoff C.; Carmalt, Claire J.; Cowley, Alan H.; Hector, Andrew L.; Kamepalli, Smuruthi; Lawson, Yvonne G.; Norman, Nicholas C.; Parkin, Ivan P.; Pickard, Laura K. (1 June 1997). "Preparation and Characterization of a Material of Composition BiP (Bismuth Phosphide) and Other Intergroup 15 Element Phases". Chemistry of Materials. pp. 1385–1392. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/cm960606f. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்_பாசுபைடு&oldid=3361975" இலிருந்து மீள்விக்கப்பட்டது