பிசுவா பந்து சென்
இந்திய அரசியல்வாதி
பிசுவா பந்து சென் (Biswa Bandhu Sen)(பிறப்பு 23 மே 1953) ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டப் பேரவையின் சபாநாயகரும் ஆவார்.[1][2] இவர் வடக்கு திரிபுரா மாவட்டத்தின் 56-தர்மநகர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு சென் இரண்டு முறை காங்கிரசு கட்சி சார்பில் வெற்றி பெற்றார். 2017-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சென், 2018 சட்டமன்றத் தேர்தலில் 7287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிசுவா பந்து சென் Biswa Bandhu Sen | |
---|---|
சட்டப்பேரவைத் தலைவர்-திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மார்ச்சு 2023 | |
முன்னையவர் | இரத்தன் சக்கரபர்த்தி |
தொகுதி | தர்மநகர் சட்டமன்றத் தொகுதி |
துணை-சபாநாயகர்-திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் 21 சூன் 2018 – 2 மார்ச்சு 2023 | |
முன்னையவர் | பபித்ரா கார் |
பின்னவர் | இராம் பிரசாத் பால் |
தொகுதி | தர்மநகர் சட்டமன்றத் தொகுதி |
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2008 | |
தொகுதி | தர்மநகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 மே 1953 தர்மநகர், திரிபுரா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2017 - முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2017 வரை) |