பிச்சாவரை (நெல்)
பிச்சாவரை (Pichavari) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்ற வட்டாரங்களில் செழித்து வளரக் கூடிய இந்நெல் இரகம், வெள்ளப்பெருக்கு, மற்றும் வறட்சி என இருவேறு சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள தாளடிப் பயிராகும். நேரடி விதைப்புக்கும், மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்ற நெல் இரகமான இது, 110 நாளிலிருந்து, - 115 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது. குறுகியகால நெற்பயிராக உள்ள இதன் சாகுபடி, ஒரு ஏக்கருக்கு சுமார் 4800 கிலோ (75 கிலோ பையில் 64 மூட்டை) வரையில் மகசூல் கொடுக்கக்கூடிய நெல் வகையாகும்.[1]
பிச்சாவரை |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
110 – 115 நாட்கள் |
மகசூல் |
எக்டேருக்கு சுமார் 4800 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
பருவகாலம்
தொகுஅதிகப்படியாக 120 நாட்கள் வயதுடைய இந்த பிச்சாவரை நெல் வகை, அக்டோபர் மாதம் முதல், நவம்பர் மாதம் முடிய உள்ள பின் தாளடி பட்டம் (பருவம்) சாகுபடி செய்ய உகந்ததாக உள்ளது. மேலும், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கரூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இப்பருவக் காலங்களில் இதுபோன்ற குறுகியகால நெல்வகைகளை வேளாண்மைச் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.[2]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Traditional Varieties grown in Tamil nadu - Pichavari". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-26.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]