பிதுரங்கல விகாரை
பிதுரங்கல விகாரை (Pidurangala Vihara) என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிதுரங்கல கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான பௌத்த ஆலயமாகும் . வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா கோட்டைக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிதுரங்கல என்ற பாரிய பாறையின் மீது இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.[1]
பிதுரங்கல விகாரை | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பிதுரங்கல விகாரை, இலங்கை |
புவியியல் ஆள்கூறுகள் | 07°57′57.0″N 80°45′44.7″E / 7.965833°N 80.762417°E |
சமயம் | பௌத்தம் |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | மாத்தளை |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் |
இணையத் தளம் | www |
சொற்பிறப்பியல்
தொகுபிதுரங்கல என்ற பெயர் சிங்களத்தில் பிது+ரன்+கோடா என்ற வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது "தங்கக் குவியல்களை வழங்குதல்" என்று பொருள்.[2]
வரலாறு
தொகுபிதுரங்கல விகாரையின் வரலாறு கிமு முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு அப்பால் செல்கிறது என்று நம்பப்படுகிறது.[3] அந்த நாட்களில் இருந்து பிதுரங்கல ஒரு பௌத்த மடாலயமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் முதலாம் காசியப்பன் (473 - 495 கி.பி.) ஆட்சியின் போது இது ஒரு முக்கிய இடமாக மாறியது.
பழங்காலக் குறிப்புகளின்படி, இளவரசர் காசியப்பன் தாதுசேன மன்னனின் 2 ஆவது மனைவிக்கு பிறந்த மகனாவான். தாதுசேனனுக்குப் பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த முகலனுக்கே அரச உரிமையுண்டு. எனினும் காசியப்பன் தந்தை தாதுசேனனைக் கொன்றுவிட்டு, தப்பி செல்லும் போது தனது சகோதரன் முகலனின் பதிலடித் தாக்குதல்களைத் தடுக்க மிகவும் பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க சிகிரியாவுக்கு ஓடிவிட்டான். மன்னன் காசியப்பரின் வருகை காரணமாக, அங்கு தியானத்தில் இருந்த பிக்குகள் அருகிலுள்ள பிதுரங்கலவுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தபப்பட்டனர்.[4] அதற்கீடாக மன்னன் காசியப்பன் கோவிலை புதுப்பித்து ஒரு முக்கிய இடமாக மாற்றினான்.[3] பின்னர் காசியப்பன் சிகிரியாவில் கோட்டை அமைத்து அரசாட்சி எய்தினான்.
கோயில்
தொகுஐந்து முக்கிய சடங்கு கட்டிடங்களைக் கொண்ட இந்த கோவில் பஞ்சவச என்றும் அழைக்கப்படுகிறது. கட்டிடங்களில் பழங்கால ஸ்தூபி, வீடு, உருவ இல்லம், போதிகாரா, பிரசங்க மண்டபம், சங்கராம (பிக்கு குடியிருப்பு கட்டிடம்) மற்றும் சொட்டுநீர் குகைகள் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "PIDURANGALA ROCK TEMPLE". Seelanka.net. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
- ↑ "Pidurangala". Sunday Observer. 5 September 2010. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
- ↑ 3.0 3.1 "Pidurangala Temple Archaeological Site". srilankatravelnotes. July 2012. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pidurangala: In the midst of serenity". The Sunday Times. 1 November 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
- ↑ "Pidurangala". angelfire.com. 25 March 2007. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பிதுரங்கல விகாரை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.