பினகடி நிலக்கீல் ஏரி

பினகடி நிலக்கீல் ஏரி (அல்லது பினகடி தார் குழிகள்) என்பது அசர்பைஜானின் நகர்ப்புறமான பக்கூவில் உள்ள தார் குழிகளின் தொகுப்பாகும். இங்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலக்கீல் அல்லது தார் தரையிலிருந்து கசிந்துள்ளது. தார் பெரும்பாலும் தூசி, இலைகள் அல்லது தண்ணீரால் மூடப்பட்டிருக்கும். பல நூற்றாண்டுகளாக, தாரில் சிக்கிய விலங்குகளின் எலும்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

பினகடி நிலக்கீல் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட ரைனோசெரசு பினகாடியன்சி (பிளீஸ்டோசீன்) எலும்புக்கூடு. ஹசன் பே ஜர்தாபி, பக்கூ இயற்கை-வரலாற்று அருங்காட்சியகம்.

இங்கு பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மார்ச் 16, 1982[1] அன்று அசர்பைஜான் குடியரசு அரசாங்கத்தின் ஆணை எண். 167கீழ் இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுச்சின்னமாக அரசால் பாதுகாக்கப்படுகிறது.

புவியியல் பகுதி தொகு

பினகடி பகுதியானது மலையின் உச்சியில் பினகடி குடியேற்றத்தின் தென்கிழக்கே 0.5 கி. மீ. தொலைவிலும், பாகுவின் வடக்கே 7 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள கடற்கரை 10 கி.மீ. தொலைவில் தெற்கையும் வடக்கே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2]

எலும்பு கொண்டுள்ள பகுதி தோராயமாக 1.5 ஹெக்டேர்களை உள்ளடக்கியது. இது கைரார் மலைக்கு அருகில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. இப்பகுதி தற்போதைய கடல் மட்டத்திலிருந்து 54-57 மீ உயரத்திலும், பாயுக்ஷோர் ஏரியின் மட்டத்திலிருந்து 48 மீ உயரத்திலும் உள்ளது. ஒரு பழங்கால மண் எரிமலை (கிச்சிக்-டாக்) புதை படிவ பகுதிக்கு வடக்கே அமைந்துள்ளது. மேலும் வடக்கே மெரிடியோனலாக நீளமான, உப்புத்தன்மை கொண்ட மசாசிர் ஏரி (மிர்தலியாபி) மற்றும் வடகிழக்கில் பினகடி ஏரி உள்ளது. கிழக்கே கரியாடக்-சோர் என்ற தாழ்வுப் பகுதி உள்ளது. இதைத் தாண்டி பாலகானி பீடபூமி உள்ளது. பினகடி மலையிலிருந்து எண்ணெய் தாங்கும் சலினாசு மற்றும் உப்புத்தன்மை கொண்ட பெயுக்-சோர் ஏரி ஆகியவை தென்கிழக்கு வரை நீண்டு காணப்படுகிறது.[2]

இயற்கை-வரலாற்று அருங்காட்சியகம் தொகு

பினகடி பகுதியில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட கலிபோர்னியா லா ப்ரியா தார் குழிகளை விட குவாட்டர்னரி விலங்கு புதைபடிமங்களின் எண்ணிக்கை செழுமையாக இருப்பதாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[1] காக்கேசியா, மத்திய கிழக்கு மற்றும் என்ஐஎஸ் நாடுகளின் ஐரோப்பியப் பகுதியின் படிம உயிரியலினைப் படிப்பதில் பினகாடி படிவுகள் முக்கியமானது.[1]

முதல் கண்டுபிடிப்பு தொகு

இந்த இடம் 1938ஆம் ஆண்டில் அப்செரான் பிற்றுமின்களைப் படித்துக் கொண்டிருந்த மஸ்தான்-சடே என்ற மாணவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் அகழ்வாராய்ச்சிகள் 1938இல் போகாச்சேவ்வால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது ஒருங்கிணைந்த சோவித் ஒன்றிய அறிவியல் அகாதமியின் அச்ர்பைஜான் கிளையாகும். அகழ்வாராய்ச்சிகள் கசபோவா மற்றும் சுல்தானோவ் ஆகியோரின் பங்கேற்புடன் 1941 வரை தொடர்ந்தன. மேலும் 1946ல் புர்சக்-அப்ரமோவிச்சின் மேற்பார்வையின் கீழ் மீண்டும் தொடங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Binegadi" 4th Period Fauna and Flora Deposit
  2. 2.0 2.1 2.2 N. K. Vereshchagin. The mammals of the Caucasus: a History of the Evolution of the Fauna. — Israel Program for Scientific Translations, 1967. — 816 pages

ஆதாரங்கள் தொகு

  • Huseynov, Said; Harris, John M. (December 1, 2010). "Azerbaijan's fossil cemetery: ice-age animals fell victim to an Asian version of California's La Brea Tar Pits". Natural History: pp. 16–21. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பினகடி_நிலக்கீல்_ஏரி&oldid=3432274" இலிருந்து மீள்விக்கப்பட்டது