பினெக்ஸ்

ஏதென்சில் உள்ள மலை மற்றும் தொல்லியல் தளம்

பினெக்ஸ் (Pnyx) என்பது கிரேக்கத்தின் தலைநகரான நடு ஏதென்சில் உள்ள ஒரு மலையாகும். கிமு 507 இல் தொடங்கி ( ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்ஸ் ), ஏதெனியர்கள் தங்கள் பிரபலமான கூட்டங்களை நடத்துவதற்காக இந்த மலையில் கூடினர். இதனால் இந்த மலையானது சனநாயகத்தை உருவாக்கியதற்கான துவக்க மற்றும் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாக ஆக்கியது.

Pnyx
Πνύξ
பினெக்ஸ் பேச்சாளர் மேடை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Greece Athens central" does not exist.
இருப்பிடம்ஏதென்சு, கிரேக்கம்
பகுதிஅட்டிகா
ஆயத்தொலைகள்37°58′18″N 23°43′10″E / 37.971667°N 23.719444°E / 37.971667; 23.719444
வரலாறு
கட்டப்பட்டது507 BC
காலம்Fifth-century Athens
கலாச்சாரம்பண்டைக் கிரேக்கம்
பகுதிக் குறிப்புகள்
நிலைபாழ்
உரிமையாளர்பொதுச் சொத்தது
மேலாண்மைகலாச்சார அமைச்சகம்
பொது அனுமதிஉள்ளது
பினெக்ஸ் முன்புறம், சொற்பொழிவாளர் மேடை வலதுபுறம், அக்ரோபோலிசின் பின்னணி.

பினெக்ஸ் அக்ரோபோலிசுக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் (0.62 கல் ) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் ஏதென்சின் மையத்தில் சின்டாக்மா சதுக்கத்தின் தென்மேற்கே 1.6 கிலோமீட்டர்கள் (0.99 mi) அமைந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் தொகு

கி.மு. 507 இல், கிளீசுத்தனீசின் சீர்திருத்தங்கள் குடிமக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியபோது, ஏதென்சில் பிரபலமான கூட்டங்களுக்குப் பினெக்ஸ் பயன்படுத்தப்பட்டது. அப்போது அது நகரத்திற்கு வெளியே சரியான இடத்திலும், வசதியாக அருகில் இருக்கும் அளவுக்கு இருந்தது. இது நகரத்தின் வணிக மற்றும் சமூக மையமாக இருந்த பழங்கால அகோராவைக் மேலே இருந்து பார்ப்பதாக உள்ளது.

இந்தத் தளத்தில் "பொற்கால" ஏதென்சின் அனைத்து பெரிய அரசியல் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. பெரிக்கிளீசு, அரிசுடடைடீசு, ஆல்சிபியாடீசு ஆகியோர் இங்குப் பேசினர். இங்கே டெமோஸ்தனிஸ் மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பைப் பற்றிய தனது பழி தூற்றல்களைச் செய்தார்.

பகுதி தொகு

 
பினெக்சின் மையத்தில் உள்ள சொற்பொழிவாளர் மேடை படிக்கட்டுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.

பினெக்ஸ் என்பது பூங்காக்களால் சூழப்பட்ட ஒரு சிறிய, பாறைகள் கொண்ட மலையாகும். அதன் பக்கவாட்டில் அரிக்கப்பட்ட கல்லின் பெரிய தட்டையான தளம் அமைந்துள்ளது. மேலும் அதன் சரிவில் படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இது உலகின் பழமையான அறியப்பட்ட சனநாயக சட்டமன்றங்களில் ஒன்றான ஏதெனியன் எக்லேசியா (சட்டமன்றம்) கூடும் இடமாக இருந்தது. இதில் இருந்த தட்டையான கல் மேடை பீமா, "படிக்கல்" அல்லது உரையாளரின் மேடையாக இருந்தது. பெரிக்கிள்ஸ் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் சொற்பொழிவாளர்கள் சொற்பொழிவு செய்த தளம் இதுதான். [1]

பினெக்ஸ் என்பது isēgoría (கிரேக்கம்: ἰσηγορία ) "சம பேச்சு", அதாவது ஒவ்வொரு குடிமகனும் கொள்கை சார்ந்த விசயங்களை விவாதிக்கச் சம உரிமை கொண்ட இடம். சனநாயகத்தின் மற்ற இரண்டு கோட்பாடுகள் ஐசோனோமியா (கிரேக்கம்: ἰσονομία ), சட்டத்தின் கீழ் சமத்துவம் மற்றும் ஐசோபொலிட்டியா (கிரேக்கம்: ἰσοπολιτεία ), வாக்குகளில் சமத்துவம் மற்றும் அரசியல் பதவியை ஏற்க சம வாய்ப்பு. ஐசிகோரியாவின் உரிமை பினெக்ஸ் சட்டமன்றத்தின் தலைமை அதிகாரியால் நடத்தப்பட்டது. அவர் ஒவ்வொரு விவாதத்தையும் " Tís agoreúein boúletai? " என்ற அழைப்போடு முறையாகத் தொடங்கினார். (கிரேக்கம்: " Τίς ἀγορεύειν βούλεται; ", "பிரபலமான அவையில் யாராவது பேச விரும்புகிறார்களா?" )

பினெக்ஸ் கிமு நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மதில் சுவரால் பாதுகாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. புதிய சுவர்கள், கிட்டத்தட்ட திடமான கட்டுமானமாக, மேவுகற் கட்டுமானவேலை செய்யப்பட்டதாக, இரண்டு மீட்டர் தடிமன் கொண்டதாக இருந்தது. [2] சுவர் 40 மீட்டர் இடைவெளியில் ஏழு கோபுரங்களைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இணைக்கும் சுவர்கள் முட்டு அமைப்புகளால் பலப்படுத்தப்பட்டன. [2]

Panorama of the Pnyx

துவக்ககால வரலாறு தொகு

பினெக்சானது ஏதெனியன் சனநாயக அவை அதிகாரப்பூர்வமாகக் கூடும் ( பண்டைக் கிரேக்கம்ekklesia ) இடமாகும். ஏதெனியன் சனநாயகத்தின் ஆரம்பக் காலத்தில் (கிமு 508 இல் கிளீஸ்தீனசின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு), எக்லேசியா அகோராவில் கூடியது. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கூடும் இடம் அக்ரோபோலிசின் தெற்கிலும் மேற்கிலும் ஒரு மலைக்கு மாற்றப்பட்டது. இந்தப் புதிய சந்திப்பு இடம் "பினெக்ஸ்" என்று அழைக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. Wordsworth, Christopher (1855). Athens and Attica: Notes of a Tour. London: John Murray. பக். 55. https://archive.org/details/athensatticanote00word. 
  2. 2.0 2.1 Freely, John (2004). Strolling Through Athens: Fourteen Unforgettable Walks Through Europe's Oldest City. New York: Palgrave Macmillan. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1850435952. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினெக்ஸ்&oldid=3581459" இலிருந்து மீள்விக்கப்பட்டது