பின்தயா
பின்தயா மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு நரம். இது மாநிலத்தின் மேற்குப் பகுதியில் டாங்கீ மாவட்டத்தில் பின்தயா நகராட்சி நிர்வாகப் பகுதியில் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் புகழ்பெற்ற சுண்ணாம்புக் குகை ஒன்று உள்ளது. அது பின்தயா குகை என்றழைக்கப்படுகிறது. இந்தக் குகையில் எண்ணற்ற புத்தர் சிலைகள் உள்ளது. பல நூற்றாண்டாக இந்தக் குகையில் உள்ள புத்தர் சிலைகள் இங்கு வழிபடப்ப்டுகிறது. இந்நகரத்தில் ஒவ்வொறு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கூடும் சந்தை நடத்தப்படுகிறது. இந்நகரம் தனு சுயாட்சிப் பகுதியின் தலைநகராகும்.
பின்தயா
ပင်းတယမြို့ | |
---|---|
ஆள்கூறுகள்: 20°57′0″N 96°40′0″E / 20.95000°N 96.66667°E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | ஷான் மாநிலம் |
மாவட்டம் | டாங்கீ மாவட்டம் |
நகராட்சி | பின்தயா நகராட்சி |
மக்கள்தொகை (2005) | |
• மதங்கள் | பெளத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
பெயர்க்காரணம்
தொகுபின்தயா என்றால் பர்மிய மொழியில் சிலந்தி எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது அர்த்தமாகும். ஒரு புராண கதையின் படி அங்கிருக்கும் குகையில் ஒரு காலத்தில் பெரிய சிலந்தி இருந்ததாகவும் அந்தச் சிலந்தி ஒரு இளவரசனை பிடித்து வந்த குகையில் சிறைவைக்க முயன்றது ஆனால் இளவரசன் அந்தச் சிலந்தியிடன் சண்டையிட்ட கொன்றுவிட்டான். இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் அர்த்தம் கொள்ளப்பட்டது என்று பொருள் படும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளிப்புற இணைப்புகள்
தொகு- Land of Harmony, பின்தயாவினிடையே ஒருப் பயணம் பரணிடப்பட்டது 2011-07-06 at the வந்தவழி இயந்திரம் Debbie Jefkin-Elnekave, December 2003, PSA Journal
- பின்தயா புகைப்படங்கள்