பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்


பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1862 செப்டம்பர் 10 - 1914 சூலை 30]), தமிழறிஞர்; உரையாசிரியர்; நினைவாற்றல் கலைஞர்; கவிஞர்; தமிழாசிரியர். மொழிபெயர்ப்பாளர்.

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்
தமிழறிஞர்
பிறப்பு 1862 செப்டம்பர் 10
பின்னத்தூர் (திருத்துறைப் பூண்டித் தாலுகழா)]]
இறப்பு 1914 சூலை 30
பணி பேராசிரியர்

பிறப்பு

தொகு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள பின்னத்தூர் என்னும் சிற்றூரில் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன் – சீதாலட்சும் இணையருக்கு மூத்தமகனாக 1862 செப்டம்பர் 10 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள் என்பது ஆகும். இவருக்கு மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும் இருந்தனர்.[1]

கல்வி

தொகு

நாராயணாசாமி தனது தொடக்கக்கல்வியை கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியரின் திண்ணைப்பள்ளியில் பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை மறைக்காட்டில் தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார்.

இவர் 1899 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.[2]

இவர் சங்க இலக்கியத்தில் ஒன்றான நற்றிணைக்கு உரை எழுதி இருக்கிறார்.[2] இந்நூல் சென்னபட்டணம். சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில் இராக்ஷச ௵ வைகாசி ௴ அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு

தொகு

காளிதாசன் வடமொழியில் இயற்றிய பிரகசன என்னும் நாடகநூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.[2]

இயற்றிய நூல்கள் [3]

தொகு
  1. நீலகண்டேசுரக் கோவை
  2. இடும்பாவன புராணம்
  3. இறையனாற்றுப்படை
  4. சிவபுராணம்
  5. சிவகீதை
  6. நரிவிருத்தம்
  7. மாணாக்கராற்றுப்படை (1900)
  8. இயன்மொழி வாழ்த்து
  9. தென்றில்லை (தில்லைவளாகம்) உலா
  10. தென்றில்லைக் கலம்பகம்
  11. பழையது விடு தூது
  12. மருதப்பாட்டு
  13. செருப்பு விடு தூது
  14. தமிழ் நாயக மாலை
  15. களப்பாழ்ப் புராணம்
  16. இராமாயண அகவல்
  17. அரதைக்கோவை
  18. வீர காவியம்
  19. வன்மீகரும் தமிழும்

மறைவு

தொகு

நாராயணசாமி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் 1914 சூலை 30 ஆம் நாள் மறைந்தார்.[2]

சான்றடைவு

தொகு
  1. தமிழ்மணி, தினமணி
  2. 2.0 2.1 2.2 2.3 வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.276
  3. கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.262 -263